டைம் ட்ராவல் கதையா மார்க் ஆன்டனி….! | தனுஜா ஜெயராமன்
நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. பலர் படம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது. தன் அபார நடிப்பால் இருக்கையில் கட்டிப் போட்டு வைக்கிறார் எஸ்.ஜே. சூர்யா என்கிறார்கள்.
மார்க் ஆன்டனியில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. அதற்கான தனித்தனி மேக்கப்கள் அவர்களுக்கு உள்ளன.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
திரைமொழியில் லாஜிக் பார்க்காமல் சும்மா பார்த்து ரசிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற படம் தான் மார்க் ஆண்டனி.
ஹீரோ விஷாலா ஹீரோ எஸ்.ஜே.சூர்யா வா என்கிறார்கள் மார்க் ஆண்டனி படம் பார்த்தவர்கள்.
சிலர் கதையில் எதுவும் புதுமை இல்லை. வழக்கமான கேங்ஸ்டர் டிராமா தான். ஆனால் அதை ஆதிக் ரவிச்சந்திரன் திரையில் காட்டிய விதம் தான் பரவாயில்லை.
சிலரோ வழக்கமான டைம் ட்ராவல் கதை தான். ஆனால் குழப்பமென்கிறார்கள்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் சில காட்சிகள் வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. முக்கியமான காட்சியில் சில்க் ஸ்மிதாவை கொண்டு வந்ததை பாராட்டியே ஆக வேண்டும் என்கிறார்கள் சிலர்.