ஆக்ரி சாச் – வெப் தொடர்..| தனுஜா ஜெயராமன்

 ஆக்ரி சாச் – வெப் தொடர்..| தனுஜா ஜெயராமன்

ஆக்ரி சாச் ஒரு த்ரில்லிங் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த புலனாய்வு தொடர். இது 2018 புராரி என்கிற இடத்தில் நடந்த சம்பவத்தில் அடிப்படையில் என்கிறார்கள்.

இந்தி மொழியின் இந்த கிரைம் திரில்லர் டிவி தொடரின் இயக்குனர் ராபி கிரேவால். அபிஷேக் பானர்ஜி, ஷிவின் நரங், டேனிஷ் இக்பால், நிஷு தீட்சித், கிருதி விஜ் மற்றும் சஞ்சீவ் சோப்ரா ஆகியோருடன் தமன்னா பாட்டியா முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

புது டெல்லியில் ஒரே இரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கதை துவங்கி பார்ப்போரை குலை நடுங்க வைக்கிறது இத்தொடர். இது கொலையா? தற்கொலையா? என பலருக்கும் சந்தேகங்கள் எழுகிறது. இதனை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக லீடிங் ரோலிங் தமன்னா பாட்டியா நடித்துள்ளார்.

இந்த 11 மரணங்கள் நிகழ்ந்ததற்கான காரணங்களை விசாரித்ததில் நூல் பிடித்த மாதிரி பல தகவல்கள் சிக்குகின்றது. அந்த வீட்டிலுள்ள ஒரு இளம் பெண்ணிற்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த சூழலில் அந்த மணமகனையும் கூட சந்தேக வட்டத்திற்குள் வைத்து விசாரிக்கிறது போலீஸ். தொடந்த விசாரணைகளில் குற்றவாளிகள் யார் என்கிற எதிர்பார்ப்பு பார்ப்போரின் ஆவலை கிளறுகிறது.

“காவலைய்யா “ பாடலில் ஆடும் தமன்னாவா இது என வியக்க வைக்கிறார் தமன்னா பாட்டியா. இறுக்கமான முகத்தோடு மிடுக்கான போலீஸ் பார்வையில் மிரட்டுகிறார். நவம்பர் ஸ்டோரிக்கு பிறகு தமன்னா நடிக்கும் த்ரில்லர் தொடர் என்பதால் எதிர்பார்ப்பு பலவாறாக எகிறுகிறது. கொலையாளி யார்? என யூகிக்க முடியாத திருப்பங்கள் நம்மை சஸ்பென்ஸில் ஆழ்த்துகிறது. மொத்தத்தில் சுவராஸ்யமான இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் வெப் தொடர் இது.

இது சைக்காலிக்கல் தொடரா? ஹார்ர் வகை தொடரா? , திரில்லர் வகை தொடரா? என நம்மை சஸ்பென்ஸில் பரபரப்பாக்குகிறது.

இந்த தொடர் ஆகஸ்டு 25 அன்று தொடங்கப்பட்டு ஒவ்வொரு வெள்ளியன்று வெளியாகிறது. இதுவரை நான்கு எபிசோட்கள் வெளியாகியுள்ளது. இன்று தொடரின் ஐந்தாம் பாகம் வெளியாக உள்ளது. இத்தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் காண கிடைக்கிறது. ரசிக்கத்தக்க தொடர் … கண்டு மகிழுங்கள்…!

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...