ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்ட் … திரையுலகில் பரபரப்பு! | தனுஜா ஜெயராமன்

 ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்ட் … திரையுலகில் பரபரப்பு! | தனுஜா ஜெயராமன்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு ப்ரபல நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ள செய்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பி உள்ளது.

அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நான்கு நடிகர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏறகனவே தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தனுஷ், விஷால், அதர்வா, சிம்பு ஆகிய நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

சிம்பு மீது ஏற்கனவே பல முறை புகாரளித்து பேச்சு வார்த்தை நடத்தி முடிவடையாத நிலையில் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கொள்காட்டி ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாம்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு வைக்காதது தொடர்பாக ரெட்கார்டு கொடுக்கவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷிற்கு ரெட்கார்டு வழங்க முடிவு செய்துள்ளதாம்.

தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காமல் நழுவுவதால் அவருக்கு ரெட்கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...