திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால் ! | தனுஜா ஜெயராமன்

 திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஷால் ! | தனுஜா ஜெயராமன்

இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் விஷால் என புகைப்படங்கள் வெளியாகி உள்ளது

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

விஷாலின் முந்தைய படங்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் பட இல்லை. தற்போது வெளியாக உள்ள மார்க் ஆண்டனி படம் விஷாலுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிக முக்கியமானது எனலாம். ஏற்கனவே இப்படம் வெளியாவதில் பல்வேறு தடைகளும் சிக்கல்களும் எழுந்தது. படம் வெளியிட தடை இல்லையென நேற்று தீர்ப்பும் வெளியானது. இந்நிலையில் இன்று விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்ட் வழங்கியுள்ளதும் பரபரப்பினை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...