ஐப்பான் படத்தின் டப்பிங்கில் “கார்த்தி” | தனுஜா ஜெயராமன்
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.
குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு கவனிக்கிறார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, “Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” என்று பதிவிட்டுள்ளார்.