வரலாற்றில் இன்று (15.09.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
செப்டம்பர் 15 (September 15) கிரிகோரியன் ஆண்டின் 258 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 259 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 107 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
668 – பைசண்டைன் பேரரசன் இரண்டாம் கொன்ஸ்டன்ஸ் இத்தாலியில் கொல்லப்பட்டான்.
1556 – புனித ரோமப் பேரரசின் முன்னாள் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் ஸ்பெயின் திரும்பினான்.
1812 – நெப்போலியன் பொனபார்ட் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் மொஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை அடைந்தனர்.
1821 – ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன.
1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வேர்ஜீனியாவின் ஹார்ப்பர்ஸ் துறையைக் கைப்பற்றினர்.
1873 – பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி ஜெர்மானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
1916 – முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக தாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
1935 – ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
1935 – நாசி ஜெர்மனி சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையான ஜெர்மனிய வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.
1945 – தெற்கு புளோரிடாவிலும் பகாமசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.
1950 – கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.
1952 – ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
1958 – நியூ ஜேர்சியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
1959 – நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.
1963 – ஐக்கிய அமெரிக்காவின் பேர்மிங்ஹாமில் ஆபிரிக்க-அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1968 – சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1975 – பிரெஞ்சுத் தீவான கோர்சிக்கா இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
பிறப்புகள்
1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ்திரைப்பட பாடலாசிரியர். (1973)
1254 – மார்க்கோ போலோ, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1324)
1857 – வில்லியம் டாஃப்ட், ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவர் (இ. 1930)
1858 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரெஞ்சு மதகுரு (இ. 1916)
1860 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியாளர் (இ. 1962)
1876 – சரத்சந்திர சட்டோபாத்யாயா, இந்திய எழுத்தாளர் (இ. 1938)
1890 – அகதா கிறிஸ்டி, எழுத்தாளர் (இ. 1976)
1909 – சி. என். அண்ணாதுரை, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (இ. 1969)
1939 – சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசியல்வாதி
1946 – மைக் புரொக்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
1964 – ஸ்டீவ் வாட்கின், வெல்சு துடுப்பாளர்
1965 – இராபர்ட் பிகோ, சிலோவாக்கிய அரசியல்வாதி
1967 – ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை
இறப்புகள்
1950 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், (பி. 1876)
1995 – ஹாரி கால்டர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1901)
2005 – ரா. தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (பி. 1946)
சிறப்பு நாள்
அனைத்துலக மக்களாட்சி நாள்
கொஸ்டா ரிக்கா – விடுதலை நாள் (1821)
எல் சல்வடோர் – விடுதலை நாள் (1821)
குவாத்தமாலா – விடுதலை நாள் (1821)
ஹொண்டுராஸ் – விடுதலை நாள் (1821)
நிக்கராகுவா – விடுதலை நாள் (1821)