புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல் காரராகவும் நடித்திருந்தார். அல்லு அர்ஜூனின் பாடி லாங்குவேஜ், பேச்சு என அனைத்தும் தரமானதாக இருந்தது.

உலகம் முழுவதும் இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம், அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி வசூலித்து பாலிவுட்டை வாய்பிளக்க வைத்தது. இதையடுத்து புஷ்பா 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. அந்த டிரைலரில், சிறையில் இருந்து தப்பிச்சென்ற புஷ்பாவை காவல்துறையினர் சுட்டுகொன்று விட்டனர் என்றும், புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் செய்தி பரவி வருகிறது. இதனால், புஷ்பாவின் ஆதரவாளர்கள் கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...