“இம்மானுவேல் சேகரன்”

 “இம்மானுவேல் சேகரன்”

இம்மானுவேல் சேகரன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் (பள்ளி ஆசிரியர்),  ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இம்மானுவேல் சேகரன் அவர்கட்கு இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர் அதற்கு ஒரு சான்றாக அவருடைய 18ஆவது வயதில் அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டார் .அதனால் அவர்கட்கு முன்று மாதம் சிறை தண்டனை விதிக்க பட்டது

1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பல மொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், இந்தி, உருசிய மொழி உட்பட ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். மேலும் இவர் சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார்.

1946 மே 17 ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.

1950-ல் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.

காமராசர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இம்மானுவேல் சேகரனார் காங்கிரசில் இணைந்தார்

செல்லூரிலிருந்து வெங்கட்டான் குறிச்சிக்கு குடிபெயர்ந்த போது இவரை கொலை செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1957களில் நடந்த சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் சார்பில் கலந்து ஆறு பேரில் இம்மானுவேல் சேகரனார் ஒருவர். தனக்கு இணையாக வேறு தலைவர் உருவாவதை கண்டு சகிக்க முடியாமல் அவர் படுகொலை செய்யப்பட்டார். பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்கம் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தால் ராமனாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்துக்கும் மறவன், கள்ளன் சமூகத்திற்கும் இடையே கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன.

இம்மானுவேல் சேகரனார் நினைவாக இந்திய அஞ்சல் துறை அக்டோபர் 9 /2010 அன்று அஞ்சல் தலை வெளியிட்டு அன்னாரை கவுரவித்தது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...