சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171 படத்தின் அபிஸியல் அப்டேட் அதிரடியாக வெளியாகியுள்ளது.

 சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171 படத்தின் அபிஸியல் அப்டேட் அதிரடியாக வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது. ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட்டாகியுள்ளார். திடீரென தலைவர் 171 அபிஸியல் அப்டேட் வெளியானதால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. நெல்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசாக கொடுத்திருந்தார். மேலும், நேற்று ஜெயிலர் சக்சஸ் மீட்டிங் நடத்தி படக்குழுவினருக்கும் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரஜினி – சன் பிக்சர்ஸ் இணையும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது அதிரடியாக வெளியாகியுள்ளது. தற்போது தலைவர் 170 படத்தில் கமிட்டாகியுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை தசெ ஞானவேல் இயக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதேநேரம் தலைவர் 171 படத்தில் இருந்து லோகேஷ் விலகிவிட்டதாகவும் சொல்லப்பட்டன. இந்நிலையில், யாருமே எதிர்பாராத நேரத்தில் தலைவர் 171 படத்தின் அபிஸியல் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், அனிருத் இசையமைப்பாளராகவும், அன்பறிவ் பிரதர்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்களாகவும் கமிட்டாகியுள்ளனர்.

தலைவர் 171 என்ற போட்ஸ்டர் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், தலைவர் 171 படத்திற்காக இப்போதே உற்சாகமாகிவிட்டனர். டிவிட்டரில் தலைவர் 171 என்ற ஹேஷ்டேக் டாப்பில் உள்ளது. இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸில் இணையுமா அல்லது வேறு கதையா என்பது குறித்து இனிதான் தெரியவரும். லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார்.

அதனை முடித்த பின்னர், தலைவர் 171 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. அதேபோல் அடுத்தாண்டு பிப்ரவரியில் தலைவர் 171 ஷூட்டிங்கை தொடங்க லோகேஷ் பிளான் செய்துள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் தலைவர் 171 படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிடவும் சன் பிக்சர்ஸ் முடிவு செய்துவிட்டதாம். லோகேஷ் கனகராஜ்ஜும் அதற்குள்ளாக மொத்த படத்தையும் முடித்துவிடுவதற்கு ஓக்கே சொன்னதாக தெரிகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...