மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் சவுந்தர்யா.
அவரது தயாரிப்பில் அசோக் செல்வன் லீட் கேரக்டரில் நடித்துள்ள கேங்ஸ் வெப் சீரிஸ் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. கேங்ஸ் டீமுடன் சென்று ரஜினியிடம் ஆசி பெற்ற சவுந்தர்யா ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனமேஷன் படம் கடந்த 2014ம் ஆண்டில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியானது. வரலாற்று பின்னணியில் உருவான இந்தப் படத்தின் திரைக்கதையை கேஎஸ் ரவிக்குமார் அமைத்திருந்தார். படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நீண்ட காலங்களுக்கு பிறகு சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராக மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்ததாக அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள கேங்ஸ் வெப் தொடரில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தத் தொடரின் பூஜைகள் தற்போது போடப்பட்டுள்ள நிலையில், விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து அவர் இந்த தொடரை தயாரிக்கவுள்ளார்.
நோஹா ஆப்ரஹாம் இயக்கத்தில் இந்த வெப் தொடர் உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்காக போடப்பட்ட பூஜையின் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார். இதனிடையே சவுந்தர்யா ரஜினி, ஆப்ரஹாம் மற்றும் ப்ரைம் தளத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் சவுந்தர்யா. இந்தத் தொடர் தனிச்சிறப்புடன் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய அப்பா நடிகர் ரஜினிகாந்திடம் கேங்ஸ் குழுவினருடன் சென்று ஆசி பெற்றுள்ளார். இதன் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தேங்யூ தலைவா, தேங்யூ சூப்பர்ஸ்டார், தேங்க்யூ அப்பா என்றும் அவர் தன்னுடைய கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். கடவுளின் ஆசிர்வாதத்துடன் அனைத்தும் சிறப்பாக நடக்க வேண்டும் என்றும் அவர் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இந்தப் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ரஜினிகாந்தும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சவுந்தர்யாவும் தனது படத்தின் அறிவிப்பை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.