இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை 08 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.9.2023,சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
இரவு 09.47 வரை நவமி. பிறகு தசமி . இன்று மாலை 05.04 வரை மிருகசீரிடம். பிறகு திருவாதிரை. விசாகம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம் : வியாபாரத்தை நல்ல விதமாக நடத்துவீர்கள். வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை சமூகமாக பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். .

ரிஷபம் : உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள்குத்து வேலையால் பாதிக்கப்படுவீர்கள். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள். பிள்ளைகளின் ஒத்துழைப்பால் மன நிம்மதி அடைவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து குடும்ப வண்டியை சீராக செலுத்துவீர்கள்.

மிதுனம் :  வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது அக்கம் பக்கம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். நுரையீரல் பிரச்சனையை சரி செய்ய மருத்துவரிடம் செல்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை இல்லாமல் தவிப்பீர்கள்.

கடகம் : திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களளில் நன்மையை பெறுவீர்கள். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானத்தை கொண்டு வருவீர்கள். தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிரிகளின் ஆசையை தவிடு பொடி ஆக்குவீர்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரத்தை மேம்படுத்துவீர்கள்.

சிம்மம் : நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள் . பெற்றோர்களின் ஆசியால் சுப நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமும் மன நிம்மதியும் அடைவீர்கள்.

கன்னி : வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் எதிரிகளின் கனவை கலைப்பீர்கள். எடுத்த காரியத்தில் தாமதமேற்பட்டு சங்கடப்படுவீர்கள் . இனம் தெரியாத கவலையால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவீர்கள். முதலாளிகளின் அன்பைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள மறக்காதீர்கள்.

துலாம் : வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். ஆனால் அதைக் கட்டுப்படுத்துங்கள். பங்கு முதலீட்டில் அதிக கவனம் செலுத்தாதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கலை சந்திப்பீர்கள். பொருளாதாரம் மந்த நிலையால் மன வேதனைப்படுவீர்கள். ஆவணங்களில் கையெழுத்து போடும் போது படித்துப் பார்க்க தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

விருச்சிகம் : உறவினர்கள் நண்பர்களின் உதவியை உரிய நேரத்தில் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். அலைச்சலையும் வேலைப்பளுவையும் கணிசமாக குறைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களை பெற அரசாங்கத்தில் இருந்த தடைகளை சாமர்த்தியமாக விலக்குவீர்கள்.

தனுசு  :   உறவுக்குள் இருந்த சிக்கலை தீர்த்து சமரச நிலைக்கு கொண்டு வருவீர்கள். குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த ஊடல் நீங்கி நெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்தில் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடைவீர்கள்.

மகரம் : கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் கோபத்தைத் தூண்டுவதால் டென்ஷன் அடைவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து எறிவீர்கள். வியாபாரப் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை நடத்துவீர்கள். பைனான்சில் நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவமானப்படுவீர்கள்.

கும்பம் : ரியல் எஸ்டேட் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்கள் உதவியை தகுந்த சமயத்தில் பெறுவீர்கள். திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.

மீனம் : வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அத்தனையிலும் வெற்றி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். எதிர்ப்புகள் தாமாகவே விலகும்படி செய்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்பட்டு வெளியூர் செல்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!