உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை/புலமை பித்தன்
1974
இளமை பருவம்
நேற்று இன்று நாளை படம் பார்த்தேன்
நண்பர்களுடன்
நீ என்ன என்ன சொன்னாலும் கவிதை
இந்த பாடல் படத்தில் பார்த்து பின் அடிக்கடி கேட்டு பித்தன் ஆகி
யாரு இந்த கவிஞர் என அறிந்த போது அவர் புலமை பித்தன் என அறிந்தேன்
அன்று முதல் இன்று என்று ம் என் விருப்ப பாடல் இது
பாடல் முழுவதும் புலமை பித்தனின் காதல் சிருங்கார ரசம் என சொல்வேன்
திரையில் மக்கள் திலகம் மஞ்சுளா ஈடு கொடுத்து நடிப்பு
TMS.மற்றும் சுசீலா அம்மா இந்த பாடலுக்கு உயிர் தர MSV அவர்களின் இசை ஜாலத்தில்
நமக்கு ஒரு காதல் பயணம்
இந்த ஜெனெரேஷன் இதெல்லாம் ரசிக்க போவது இல்லை என தெரியும்
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை… இளமை…
சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
முத்துச்சரமென குறு நகை புரிந்து
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை… இளமை…
பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
கங்கை நதியென உறவினில் கலந்து
உறவினில் கலந்து…
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை… இளமை…
வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
இந்த உலகினை ஒரு கணம் மறந்து
ஒரு கணம் மறந்து…
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை… இளமை…
இன்று அவர்களின் புலமை பித்தன் நினைவு நாள்
புலமைப்பித்தன் (Pulamaipithan; 6 அக்டோபர் 1935 – 8 செப்டம்பர் 2021) தமிழ்க் கவிஞரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் 1968 இல் வெளியான குடியிருந்த கோயில் திரைப்படத்தில் நான் யார் நீ யார் என்ற பாடல் இயற்றியதில் பாடலாசிரியராக அறிமுகமானார்.