உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று! நீரஜ் சோப்ரா முன்னேற்றம்!
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் இந்திய ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறி உள்ளார்.
ஆடவர் ஈட்டியெறிதல் தகுதிச் சுற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.
இதில், தனது முதல் முயற்சியிலேயே 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும், இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜேனா, டி.பி.மானு ஆகிய 3 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜேக்கப் அதிகபட்சமாக 89.91 மீட்டர் வீசி முதல் இடத்தை பிடித்திருந்தார். தற்போது நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை யாருமே 90 மீட்டர் என்ற தூரத்தில் வீசவில்லை.அதனை இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.