ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்… பிரதமர் மோடி!

 ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்… பிரதமர் மோடி!

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர்.

சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர், இஸ்ரோ தலைவர் படம்பிடிக்கப்பட்ட நிலவின் போட்டோக்களை வழங்கினார்.

பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்தது குறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமாக பிரதமர் மோடிக்கு எடுத்துக் கூறினார். பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பேசினார். விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா “சந்திரயான்-3” வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது என்று பெருமையுடன் கூறினார் பிரதமர் மோடி.

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி, தொடர்ந்து கூறியதாவது “இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம் பிடித்துள்ளது.

இஸ்ரோவில் விஞ்ஞானிகள் என்னென்ன சாதனை படைத்துள்ளீர்களோ, அவை அனைத்தையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவின் அடையாளமான அசோக சின்னம் தற்போது நிலவில்
பதிக்கப்பட்டுள்ளது.

“சந்திரயான்-3″ லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும். சந்திரயான்-3″ திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது. எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு ஒரு சாட்சி. நிலவில் கால்பதித்த 4வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்பு இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. “ சந்திரயான்-2″ கால்தடங்களை பதித்த நிலவின் மேற்பரப்பில் உள்ள இடம் ‘திரங்கா’ என்று அழைக்கப்படும். இது இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகமாக இருக்கும்” என்றார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...