செஸ் உலக கோப்பை போட்டியில் 2-ம் பிடித்த பிரக்ஞானந்தா… பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
செஸ் உலக கோப்பை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா… பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மட்டுமல்லாமல் 80 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் 66 லட்சத்து 13 ஆயிரத்து 444 ஆகும். மேலும் சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு 90 லட்சத்து 93 ஆயிரத்து 51 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொடரில் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாம் நிலை வீரரான நாக்கமுறா மற்றும் மூன்றாம் நிலை வீரரான கரோனா ஆகியோரை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்றாலும், தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செஸ் உலகக் கோப்பை போட்டியின் இளம் வயது இறுதிச்சுற்றுப் போட்டியாளர் என்கிற சரித்திரத்தைப் படைத்தார்.
இதற்கு முன்பு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உலகக் கோப்பையில் விளையாடி இருந்தாலும் இவ்வளவு குறைந்த வயதில் அந்த இடத்தை எட்டவில்லை என்கிறார்கள்.
சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா எத்தகைய சமூக பொருளாதார பின்புலமும் இன்றி தனது திறமையின் வழியாக மட்டுமே இவ்வளவு உயரத்தை அடைந்திருக்கிறார். மாக்னஸ் கார்ல்சனுடன் இறுதிச்சுற்றில் விளையாடிய பிரக்ஞானந்தா நாள்தோறும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் செஸ் விளையாடி பயிற்சி எடுப்பாராம்.
உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா பிரக்ஞானந்தாவினால் பெருமைபடுகிறது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் உங்கள் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது என முதல்வர் ஸ்டாலினும் கூறியுள்ளார்.