இன்றைய ராசி பலன் (சனிக்கிழமை 26 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (சனிக்கிழமை 26 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்று அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் திட்டமிட்ட கட்டுப்பாடான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சமநிலை இழக்க நேரலாம். இதனை தவிர்த்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.  பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு குறைந்து காணப்படும். போதுமான பணம் சேமிப்பது கடினமாக உணர்வீர்கள்.

ரிஷபம் : இது உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்றைய நாளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் அபாரமான செயல்திறன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனித்த திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் உங்களுக்கு மன திருப்தி ஏற்படும். ஆரோக்கியம் பற்றிய கவலை காணப்படும்.

மிதுனம் :  இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று வெற்றி காண்பதற்கான வழி வகைகளைக் கண்டறியலாம். உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் செயல்திறன் மூலம் நற்பெயரைப் பெறுவீர்கள். உங்கள் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். இன்று அதிக பணம் சம்பாதிக்க சாத்தியமான நாள். நீங்கள் புதிய முதலீட்டின் மூலம் நல்ல லாபம் காணலாம். இன்று தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதிக சிந்தனை வயப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும். பணி நிமித்தமான பயணம் காணப்படும். எதிர்பாராத வேலை மாற்றங்களுக்கான சாத்தியம் உள்ளது. ஏற்றத்தாழ்வு காரணமாக நிதிநிலைமை ஸ்திரமாக இருக்காது. பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.

சிம்மம் : இன்று மந்தமான நிலை காணப்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும். அதனை தவிர்த்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். நீங்கள் வேலையில் மூழ்கி இருப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது. பணத்தை கையாளும்போது கவனம் தேவை.

கன்னி : உங்களிடம் சிறந்த உந்துதல் காணப்படும். நேர்மையான மற்றும் சரியான முயற்சி மூலம் நீங்கள் இன்றைய தினத்தை சிறப்பாக ஆக்கலாம். உங்கள் சிந்தனயில் வேகம் காணப்படும். நீங்கள் செய்யும் பணி உங்களுக்கு சௌகரியமானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை பெறுவீர்கள். உங்கள் பணியில் நேர்மையாக இருப்பீர்கள். இன்று ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள்.

துலாம் : இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இன்று பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும். பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவு. நீங்கள் விரும்பும் பணம் இன்று உங்களுக்கு கிடைப்பது கடினம்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் தேவை. இன்றைய சவால்களை திறமையுடன் எதிர்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். இன்று பண வரவிற்கான சாத்தியம் குறைவு. இன்று பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.

தனுசு  :   இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் முன்னேற்றம் குறித்த முயற்சிகளை எடுப்பீர்கள். இதனால் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். தைரியமான கண்ணோட்டத்தை மேற்கொள்ளுங்கள். நீங்கள் பணி மாற்றம் செய்ய முயற்சி எடுப்பீர்கள். இன்று போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலாது.

மகரம் :  இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் செயல்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் நல்ல பலனைத் தரும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவீர்கள். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிக்கு பாராட்டு பெறுவீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கும்பம் : இன்று சுமூகமான முன்னேற்றம் காணப்படும். உங்கள் முடிவுகளை இன்று உறுதியாக எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காணும் மனநிலை கொள்வீர்கள். பணியைப் பொறுத்தவரை நல்ல நிலைமை காணப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம் : இன்று உங்கள் செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் இன்று அமைதியற்ற தன்மையை சமாளித்து நம்பிக்கையுடன் இருக்கலாம். உங்கள் செயல்களில் வெற்றி பெற நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் அமைதியாகச் செயல்பட வேண்டும். போதிய அளவு பணம் காணப்படாது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...