முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

 முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகள் பட்டியல் என்னென்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலையில் சூடான மற்றும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதாவது பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி ஆகியவை காலை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்கப்படும்
செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்கப்படும்
புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவா, பொங்கல் அல்லது வெண் பொங்கல் வழங்கப்படும்
வியாழக்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வழங்கப்படும்.
வெள்ளிக்கிழமை கிச்சடி வகைகளும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு தேவைப்படும் காலை சிற்றுண்டியை தயாரிக்க ஏதுவான இடங்கள், திட்டத்தை செயல்படுத்தும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை உடனடியாக தேர்வு செய்ய ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒருங்கினைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...