கைதி பட புகழ் “அர்ஜூன் தாஸ்“ நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழா!
GEMBRIO PICTURES நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் தயாரிப்பில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிரமாவாக உருவாகும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் ஆரம்ப விழா இன்று படக் குழுவினர் கலந்து கொள்ள பிரசாத் லேப்பில் சிறப்பான பூஜையுடன் இனிதே துவங்கியது.
இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
இவ்விழாவில், படக் குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசும்போது, ”பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது.
இயக்குநர் விஷால் வெங்கட் ஒரு சிறந்த இயக்குநர் அதற்கு அவரது முதல் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நானும் எங்கள் குழுவும் ஒரு 10 முறை படத்தின் கதையில் சந்தேகங்கள் கேட்டிருப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அனைவருக்கும் பொறுமையாகக் கதையை விளக்கமாகக் கூறுவார். இந்தப் படம் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.
நாங்கள் தேர்வு செய்துள்ள நடிகர்கள் படத்தின் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருப்பார்கள். குறிப்பாக காளி வெங்கட் சாருக்கு இது முக்கியமான படமாக இருக்கும். நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா அவர்களுக்கு வாழ்த்துகள். நான் இமான் சாரின் மிகப் பெரிய ரசிகை. அவரது பாடல்கள் நம்மை மெய் மறக்கச் செய்து விடும். இந்தப் படத்தின் பாடல்களும் அதே போல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்போது, ”இந்தப் படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். இமான் சாரின் ரசிகன் நான். அவர் இசையமைக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள்.
விஷால் மதுரை வந்து கதை சொன்னார். 3 மணி நேரம் சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி..” என்றார்.