சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

 சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘பரம்பொருள்.’ 

கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டைக்காட்சி பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இதன் முன்னோட்டத்தை நட்சத்திரத் தம்பதிகளான இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி பேசும்போது, “இந்நிகழ்ச்சிக்கு அழைத்ததற்காக‌ மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ‘பரம் பொருள்’ திரைப்படம் வெற்றி பெற அனைவரும் வாழ்த்துவோம்…” என்றார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...