ஜம்மு காஷ்மீரில் களை கட்டிய சுதந்திர தின விழா நிகழ்வுகள்!
ஜம்மு காஷ்மீரின் பக்ஷி மைதானத்தில் கடந்த பல வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் மூவர்ணக்கொடியை அசைத்தப்படி புதுப்பிக்கப்பட்ட பக்க்ஷி மைதானத்தில் திரண்டிருந்தனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இந்த சுதந்திர தின விழாவில் அதிகாரிகள் இந்தாண்டு நீக்கியிருந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி அனைத்து வயது ஆண்களும் பெண்களும் பக்க்ஷி மைதானத்தில் திரண்டிருந்தனர். அவர்களில் குழந்தைகளும் பலர் இருந்தது ஆச்சர்யமளிக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்காக அதிக அளவில் மக்கள் கூடியது இதுவே முதல் முறை. முன்னதாக, கடந்த 2003 ஆம் ஆண்டில் சுமார் 20,000 மக்கள் கூடி அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.
கடந்த ஆண்டுகளில் சுதந்திர தினம், குடியரசு தினங்களின் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது .
தற்போது செவ்வாய்க்கிழமை சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சாலைகளை மறித்தபடி இரும்புக் கம்பி தடுப்புகள் இல்லாதது ஸ்ரீநகரில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்களுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்த வருடம் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் செயல்பாட்டிலிருந்ததும் மக்களுக்கு மகிழ்ச்சியையும் , ஆச்சர்யத்தினையும் அளித்துள்ளது.
நடப்பாண்டு சுதந்திர தின விழா நிகழ்விற்காக கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீராக இயங்கியது. ஜம்மு காஷ்மீரில் முக்கிய கொண்டாட்டம் நடந்த பக்க்ஷி மைதானத்தைச் சுற்றியிருந்த சில பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுப்ட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.