ஜெயிலரால் தள்ளி போன ஜெயிலர்….!

 ஜெயிலரால் தள்ளி போன ஜெயிலர்….!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். மேலும் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இதுதவிர ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், இதே தலைப்பில் தான் படம் இயக்கியுள்ளதாகவும், ரஜினியின் பட தலைப்பை மாற்ற வேண்டும் எனவும் மலையாள சினிமா சேம்பரில் இயக்குனர் சக்கீர் மடத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

எனினும், இதுவரை தலைப்பு மாற்றப்படாத நிலையில், சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென மலையாள ஜெயிலர் ரீலிஸ் தள்ளிபோனது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படம் வெளியானால் தங்களது படம் மக்களிடையே வரவேற்பை பெறாது என்று உணர்ந்த சாகிர் தனது ஜெயிலர் படத்தை வெளியிடாமல் தள்ளி வைத்து விட்டார் என சொல்கிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...