உலக நாயகனா இருந்தாலும் அதுல என்னவோ லேட்தான்! அப்பவே கமலின் சாதனையை முறியடித்த நம்பியார்
தமிழ் சினிமாவில் கமலுக்கு முன்னோடியாக ஒரு உச்சம் பெற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகை நம்பியார். எம்ஜிஆரின் ஆஸ்தான வில்லனாக பல படங்களில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் மிரளவைத்தார். எத்தனையோ வில்லன்கள் அவதரித்தாலும் குறு குறு பார்வை , முறுக்கிய கைகளோடு கோபமாக பார்க்கும் அந்த பார்வையிலேயே சின்ன குழந்தைகள் கூட அலறி அடித்து ஓடிவிடும்.
அந்தளவுக்கு ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்தார் நம்பியார். ஒரு சில குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து மக்களிடம் ஒரு அன்பை பெற்றார். அதுவரைக்கும் எம்ஜிஆருக்கு வில்லனாக இருந்ததனால் அவரை தூற்றிக் கொண்டேதான் இருந்தார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில் சினிமாவிற்கு என்றே படைக்கப்பட்ட கமலை பற்றி அவரது நண்பரும் பிரபல அரசியல் விமர்சகருமான காந்தராஜ் ஒரு தகவலை பகிர்ந்தார். அதாவது கமல் அவருடைய நண்பர் என்பதை தாண்டி கமலின் சொந்த வாழ்க்கையை பற்றியெல்லாம் தனக்கு தெரியாது என்றும் ஒரு நடிகரிடம் நட்பு வேண்டுமென்றால் அது கமல் தான் என்று நினைத்ததனால் அவரிடம் பழகினேன் என்றும் கூறினார்.
மேலும் தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களில் பல கெட்டப்களில் நடித்து சாதனை படைத்திருப்பார். ஆனால் அவருக்கு முன்பே அதை நடிகர் நம்பியார் திகம்பர சாமியார் படத்தில் செய்து விட்டார் என்றும் காந்தராஜ் கூறினார்
ஆனால் கமல் மாதிரி வெவ்வேறு கெட்டப்கள் இல்லாமல் 10 ரோல்களில் நடித்திருப்பார் என்றும் ஒரு மூன்று விதமான மேக்கப்போடு நடித்திருப்பார் என்றும் கூறினார். ஆனால் 10 வேடங்களில் முதன் முதலில் நடித்தர் நம்பியார்தான் என்றும் காந்தராஜ் கூறினார். அவரை அடுத்து நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்திருக்கிறார் என்றும் கூறினார்.
திகம்பர சாமியார்
இந்தப் படம் பேசுபொருளாக இருப்பதற்கு, படத்தின் கதை, நுட்பமான திரைக்கதை, கதையில் இருக்கும் அறிவியல், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகள் என பலதும் காரணமாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து, முதலிடத்தில் இருப்பது… இருப்பவர்… ஹீரோ… எம்.என்.நம்பியார்.
நம்பியாரின் நடிப்பு, அசத்தல். அற்புதம். அபாரம். படத்தில், செவிட்டு மந்திரவாதி, வெற்றிலை வியாபாரி, நாகஸ்வர வித்வான், இஸ்லாமியர், போஸ்ட்மேன் முதலான 11 வேடங்களில் நடித்து, பிரமிப்பூட்டினார் நம்பியார்.
ஒருவர் நான்குநாட்களாக தூங்காமல் இருந்தால், ஐந்தாம்நாள் அவரிடமிருந்து ரகசியங்களை வாங்கிவிடலாம்’ என்பதை அழகாகக் காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மாடுலேஷன்கள், பாடி லாங்வேஜுகள், டயலாக் டெலிவரி என்று வெரைட்டி காட்டியிருப்பார் நம்பியார்.
1950ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளியானது ‘திகம்பர சாமியார்’. படம் வெளியாகி இன்றுடன் 73 ஆண்டுகளாகின்றன.
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் ‘திகம்பர சாமியார்’ படத்தையும் நம்பியாரையும் நம்பியார் குருசாமியையும் மறக்கவே மாட்டார்கள் ரசிகர்கள்.