இன்றைய ராசி பலன் (புதன் 09 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (புதன் 09 ஆகஸ்டு 2023)

மேஷம் : இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும் வாய்புள்ளது. அதனால் அதிக கவனத்துடன் செய்யப்பட வேண்டும். பணியிடத்தில் உங்களின் கவனக் குறைவினால் பணிகளில் தவறுகள் நேரலாம். அதனால் பணிகளை கவனமாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். குறைந்த அளவு பண வரவே இருக்கும்.

ரிஷபம் : இன்று மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக அமையும்.  உங்கள் பணிகளில் தவறுகள் நேரலாம். எனவே கவனமாக பணியாற்ற வேண்டும். வரவைவிட செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

மிதுனம் : இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் நன்மதிப்பு மற்றும் பாராட்டினை பெறுவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்று சாதகமான நாளாக அமையும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் நன்மதிப்பு மாற்று பாராட்டினை பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக காணப்படும். இதனால் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

சிம்மம் : இன்று மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக அமையும். பணிகள் அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் பணிகளை சரியாக திட்டமிட்டு ஆற்ற வேண்டும். நிதிநிலைமை குறைவாக காணப்படும். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்படும்.

கன்னி : இன்று சாதகமான பலன்களை அளிக்காது. பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகம் காணப்படுவதால் சிறிய அளவு கடன் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

துலாம் : இன்று சிறப்பான நாளாக அமையும். மேலும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

விருச்சிகம் : இன்று முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி பாராட்டினை பெறுவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு : இன்று சாதகமான நாளாக இருக்காது. பணியிடச் சூழல் சற்று கடுமையாக இருக்கும். அதனால் பணிகளை திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். பணவரவு குறைந்து காணப்படும். பதற்றம் காரணமாக ஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மகரம் : இன்று பொறுமையாக மற்றும் அமைதியாக இருக்க வேண்டிய நாளாக அமையும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காது. பணவரவு அதிகமாக காணப்படாது. அதனால் பணத்தை பார்த்து கவனமாக செலவழிக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம் : இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது. பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடம் சிறப்பாக காணப்படும். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை சேமிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...