பாலைவன சோலை பட நடிகர் மரணம்!

 பாலைவன சோலை பட நடிகர் மரணம்!

மலையாள நடிகர் கைலாஷ் நாத் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கைலாஷ் .இவர் தமிழிலும் பலராலும் அறியப்பட்ட நடிகராக இருந்தவர். 80 பதுகளில் பிரபலமாக அறியப்பட்டவர். பாலைவனச் சோலை படத்தில் “ ஆளானாலும் ஆளு “ பாடலில் பாடி ஆடியிருப்பதை மறந்திருக்க முடியாது.

இவர் கேரள மாநிலம் மன்னார் பகுதியை சேர்ந்தவர். இவர் மிமிக்ரி கலைஞர் ஆக தான் சினிமாவுக்குள் நுழைந்தார். பின் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த சங்கம் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனால் இவருக்கு சில மாதங்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி நடிகர் கைலாஷ் அவர்கள் இறந்திருக்கிறார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமாவில்மட்டுமின்றி மலையாள திரை உலகினர் மத்தியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் காமெடி வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இவர் ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவி இவருடைய பள்ளி வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாகவே இவர் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

இவர் பாலைவனச் சோலை என்ற படத்தில் நடித்திருந்தார். பின் சூப்பர் ஸ்டார் நடித்த வள்ளி திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்ட பெற்றிருந்தது. இவர் தமிழில் 90 படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை தொடர்களையும் நடித்திருக்கிறார். இப்படி கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கைலாஷ் நாத் அவர்கள் சினிமாவில் பயணித்திருக்கிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...