Cortana செயலியை நீக்கியது மைக்ரோ சாப்ட்!
இனி Cortana என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைக்காக தனியாக இயங்கும் செயலியை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம்.
இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் மோசமான சரிவில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட், AI, கேமிங் துறை முதலீடுகள் பெரிய அளவில் பலன் கொடுத்தது.
சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் ஆகஸ்ட் 2023 முதல் Cortana என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைக்காக தனியாக இயங்கும் செயலியை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்தது. இப்பிரிவில் ஆப்பிள் SIRI, கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்சா ஆகியவை இருக்கும் வேளையில் Cortana பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.
மைக்ரோசாப்ட் Cortana செயலி பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டாலும், தொடர்நது அவுட்லுக் மொபைல், டீம்ஸ் மொபைல், மைக்ரோசாப்ட் டீம்ஸ் டிஸ்ப்ளே, டீம்ஸ் ரூம்ஸ் போன்றவற்றில் இயங்கும். Cortana இல்லையென்றாலும் வாடிக்கையாளர்கள் தற்போது விண்டோஸ் மற்றும் Edge தளத்தில் AI பயன்பாடுகளை வைத்து தங்களுடைய செயல்திறனை அதிகரிக்க முடியும்.
இதன் மூலம் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவை பிரிவில் இருந்து மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக விலகியது மட்டும் அல்லாமல் Cortana செயலியை இனி மக்கள் பயன்படுத்த முடியாது.