கல்யாண் ராமின் நடிப்பில் ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில்

 கல்யாண் ராமின் நடிப்பில் ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில்

கல்யாண் ராமின் நடிப்பில் தயாராகி இருக்கும் பீரியாடீக் ஸ்பை திரில்லர் திரைப்படமான ‘டெவில்’ வரும் நவம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தேவன்ஷ் நாமா வழங்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
நவீன் மேடாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார்.

எஸ்.சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த வகையில் இந்தப் படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை தயாரிப்பாளர்கள் ‘நவம்பர் 24 2023 டிகோடிங்’ என எழுதப்பட்ட ஒரு வசீகரமான மற்றும் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
பீரியாடிக் ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...