இன்று முதல் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை…!
தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது.
தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, 67 பண்ணை பசுமைகடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு வாரம் நடைமுறையில் இருந்தது. பிறகு, அதை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, 111 நியாயவிலை கடைகளில், குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விளைச்சல் குறைந்துள்ள நிலையில், கூடுதல் விலை கொடுத்து வாங்கி, கூட்டுறவு கடைகள், நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறோம்.
தமிழகத்தில் ஆக.1-ம் தேதி (இன்று) முதல் குறைந்தபட்சம் 500 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.