மட்டிப் பழத்துக்கு புவிசார் குறீயீடு.
கன்யாகுமரி மட்டி வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.
கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்கள் உட்பட நாட்டில் 450-க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது
ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் நுனிப்பகுதி சற்று நீண்டிருக்கும்.
மட்டி வாழைப்பழம் அளவில் சிறியதாக இருக்கும். இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுவதோடு சற்று மணமாகவும் இருக்கும். இதில் மாவுத்தன்மை மிகுதியாக காணப்படுவதால் குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது.
மட்டிப்பழம் குமரிமாவட்டத்தில் பரவலாக எல்லா ஊர்களிலும் கிடைக்கும்.
புவிசார் குறியீடு கிடைத்துள்ள இந்த 3 பொருட்களின் விற்பனை விலை உயர்ந்து, இவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வாழ்வாதாரம் உயரும். இப்பொருட்களுக்கென தனி சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இப்பொருட்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்ய உலக அங்கீகாரம் கிடைக்கும்.