“உலக தாய்ப்பால் தினம் இன்று”

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தாய்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால்தான் குழந்தை பெறும் முதல் ரத்த தானம் என்று, உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்பாலும் தாய்ப்பாசமும் தான்.

தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. உலக தாய்ப்பால் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் அடங்கியுள்ளது.

அனைத்து விதமான சத்துகளும் சரியானவிகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வாரம் ஆக. 1ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் கலப்படமில்லாத கலப்படம் இல்லாதது தாய்ப்பாலும் தாய்ப்பாசமும் தான். தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும். தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு. நோயுற்ற குழந்தைக்கு தாய்ப்பாலும், தாயின் அரவணைப்பும் இதமளிக்கின்றன. குழந்தையின் மன வளர்ச்சிக்கு அது உதவுகிறது. தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் பல நண்மைகளை அளிக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பதால், கருப்பை விரைவில் சுருங்கி உதிரப்போக்கு குறையும்.

அதனால், தாயின் இரத்தம் வீணாகாமல், சோகை ஏற்படாமல் தடுக்கப்படும். தாய்ப்பாலூட்டும் தாய் தேவையற்ற தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய வடிவைப் பெற முடியும். முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்கும் தாய்மார்கள் உடனே கர்ப்பம் ஆவதில்லை. இத்தகைய தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதும் குறைவு.

தாய்ப்பாலின் நன்மைகள்:

*தாய்ப்பாலில் உயர்ந்த சதவீத லாக்டோஸ், கலட்டோஸ் அதிக அளவில் உள்ளதால் இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

* உடல் வளர்ச்சிக்கான சுண்ணாம்பு சத்து அதிக அளவில் தாய்பாலில் இருக்கிறது.

* இதில் அமினோ அமிலம் டாயூரின் மற்றும் சிட்டரின் உள்ளது. இது உணவு பரிமாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது.

*தாய்ப்பால் கொடுப்பது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.

*அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பதால். இதயம் பாதுகாக்கப்படுவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது.

*தாய்ப்பால் கொடுப்பது கர்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க:

* ஒரு சில இயற்கை உணவுகளை உண்டாலே தாய்ப்பால் அதிகமாக சுருக்கும்.

*துளசி ஒரு சிறந்த மூலிகை செடி அதை அனைத்து மருந்துகளிலும் பயன்படுத்துவது உண்டு. அத்தகைய துளசியை சாப்பிட்டால் தாய்ப்பாலும் அதிகரிக்கும்.

* வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சாப்பிட்டால் உடலில் இருக்கும் தாய்ப்பாலின் அளவு அதிமாகும்.

*காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாகும்.

*கொழுப்பு நிறைந்த நெய், வெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலும் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும் பூண்டை பாலில் சேர்த்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் சிவப்பு காய்களில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருக்கும். மேலும் பசலைச்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றிலும் உள்ளது.

*பாதாம் மற்றும் முந்திரி போன்றவைகளும் தாப்பாலை அதிகரிப்பவை.

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை:

*பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் அவர்கள் புகைப்படித்தல், மது அருந்துதல் என்பது அவர்களின் குழந்தைகளை பாதிப்பதை காட்டிலும், தாய்மை பருவத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் கொடுக்கும் பால் குழந்தைகளுக்கு வியாதியூட்டும் கிருமியாகவே மாறிவிடுகின்றது.

*புகைப்பிடிக்கும் தாய்மார்கள் ஊட்டும் தாய்பாலின் பாதிப்பு குழந்தைகளிடம் ஆரம்பகட்டத்தில் காண்பிப்பதில்லை. குழந்தைகளின் 6 முல் 7 வயதுகளில் அவர்களின் அறிவாற்றல் திறமைகளை குறிவைத்து தாக்குகிறது.

தாய்பாலையே விஷமாக மாற்றும் திறமை அந்த தாய்மார்களிடமே உள்ளது. எனவே பெண்கள் புகைப்பிடித்தல், குடிப்பழக்கங்களை கைவிடுதல் அவசியமாகிறது.

இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் காலம் காலமாக இருக்கிறது. இருப்பினும் தற்போதைய காலமாற்றத்தில் தாய் பால் வழங்க வேண்டும் என்பதை, தாய்மார்களுக்கு வலியுறுத்த வேண்டியுள்ளது. தாமதமான திருமணங்களும், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்திருப்பதும் குழந்தை களுக்கு தாய்பால் தருவதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

முறையாக தாய்ப்பால் வழங்கு வதன் மூலம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணங்களை வெகுவாக குறைக்கலாம். எனவே தாய்மார்கள் முறையாக தாய்பால் கொடுத்து குழந்தைகளை நலமுடன் வாழ வழி செய்ய இந்த நாளில் உறுதி எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!