93 வயதில் சினிமாவில் நடிக்க வருகிறார் உலக நாயகன் கமலஹாசனின் அண்ணனும் நடிகை சுகாசினியின் தந்தையுமாகிய சாருஹாசன் . விஐய் ஶ்ரீ இயக்கத்தில் நடிகர் மோகனுடன் ஹரா படத்தில் இணைய உள்ளார் நடிகர் சாருஹாசன்.

தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள படம் ‘ஹரா’.நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிப்பதால் “ஹரா” படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் மோகன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹரா’ திரைப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்க, மிகுந்த பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்று இயக்குனர் விஜய்ஸ்ரீ தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.