இனி நெட்ப்ளிக்ஸ் பார்வேட்டை பகிரமுடியாதாம்….!
ப்ரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சலுகைகளை மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறது.
கடந்த 2016 வாக்கில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளம் தனது சேவையை அறிமுகம் செய்தது. அப்போது முதல் கட்டணத்தில் ஏதும் மாற்றம் மேற்கொள்ளாமல் இருந்த நெட்ப்ளிக்ஸ் தற்போது அதிரடியாக சந்தா கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கின் போது சினிமா ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது ஓடிடி தளங்கள். அந்த ஒடிடி தளங்கள் இன்று இந்தியாவில் மிக ஆழமாக காலூன்றியுள்ளன. உலகளவில் மிகவும் பிரபலமான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் தளங்கள், தமிழ்ப் படங்களை வாங்குவதில் போட்டிப் போட்டு செயல்படுகின்றன. முன்னணி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ், அடுத்தடுத்து பல முக்கியமான தமிழ்ப் படங்களின் ரைட்ஸை வாங்கி வருகிறது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃப்ளிக்ஸ் உலகின் முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இனி நெட்ஃப்ளிக்ஸ் லாக்-இன் பாஸ்வேர்டை பயனர்கள் பிறரிடத்தில் பகிர்வது இந்தியாவில் முடிவுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.