ஸ்மார்ட் ரிங் செய்யப்போகும் மாயாஜாலம்!
ஸ்மார்ட்வாட்ச்சை இனி எல்லாரும் கழட்டி எறியபோறாங்க.. Samsung ஸ்மார்ட் ரிங் செய்யப்போகும் மாயாஜாலம்!
தொழில்நுட்ப துறையில் ஒரு அரக்கனாக பார்க்கப்படும் மிக பெரிய நிறுவனம் தான் சாம்சங் (Samsung). தென்-கொரியாவை தலமாக கொண்ட இந்நிறுவனம், 1969 முதல் பல புதிய டெக் சாதனங்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. புதுமைகளை புகுத்துவதில் சாம்சங்கிற்கு நிகர் யாருமில்லை.
இத்தகைய சாம்சங் (Samsung) நிறுவனம், தொடர்ந்து பல புதிய தொழில்நுட்பங்களை பல புதிய சாதனங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன் (Smartphone), ஸ்மார்ட் டிவி (Smart Tv), ஸ்மார்ட் வாட்ச் (Smartwatch) என்ற ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் (Smart Gadgets) வரிசையில், அடுத்ததாக நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் சாதனம் தான் ஸ்மார்ட் ரிங் (Smart Ring).
எது ஸ்மார்ட் ரிங்-ஆ? அப்படியென்றால் என்ன? இது என்ன செய்யும்? என்று பார்க்கலாமா? ஸ்மார்ட் ரிங் என்பது ஸ்மார்ட்வாட்ச் போன்ற அம்சங்களை அடக்கிய ஒரு மோதிரம் (Ring) ஆகும். இது ஸ்மார்ட்வாட்ச்களை விட, அதிக துல்லியமான தகவல்களை பயனருக்காக சேகரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்வாட்ச் போல் இல்லாமல், இது இன்னும் சிறிய சைசில் விறல் அடக்க கருவியாக வருகிறது. சாம்சங் நிறுவனம்
, சாம்சங் கேலக்ஸி ரிங் (Samsung Galaxy Ring) என்ற பெயரில் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யும். இந்த ஸ்மார்ட் ரிங் சாதனத்தை உருவாக்கும் பணிகளை சைலெண்டாக துவங்கியுள்ளது போல் தெரிகிறது. ஜப்பானை (Japan) தலமாக கொண்ட மெய்க்கோ (Meiko) நிறுவனத்தின் உதவியுடன் சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ரிங் சாதனத்தை உருவாக்க துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம். ஜப்பானை தலமாக கொண்ட மெய்க்கோ நிறுவனம் தான், இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் சாதனத்திற்கு தேவையான பிசிபி (PCB) போர்டுகளை தயாரிக்கவுள்ளது. இந்த அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் (Circuit boards) தான் சாதனத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் செயல்பாடு தீர்மானிக்கப்படும் அத்தியாவசிய கூறுகளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ட்ரேட்மார்க் முத்திரைகளின்படி, ஸ்மார்ட் ரிங்கில் ECG மற்றும் PPG போன்ற பல்வேறு உடல்நல கண்காணிப்பு சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் ஒப்பிடும் போது மிகவும் துல்லியமான தகவலை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது 24 மணி நேர உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் திறன் கொண்டதாக இருக்குமென்று கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் கொண்ட பயனர்கள்,
இனி ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை தூக்கி எறிந்துவிட்டு, ஸ்மார்ட் ரிங் சாதனங்களை மாட்டிக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. சாம்சங்கின் ஸ்மார்ட்தின்ங்ஸ் (SmartThings) ஆப்ஸ் சமீபத்தில் ஸ்மார்ட் ரிங்-களுக்கான ஆதரவைச் சேர்த்தது. ஆனால் இது கூட்டாளர் பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு உரியது. இந்த பிரிவில் பிரபலமான பிராண்ட் ஃபின்லாந்தை தளமாகக் கொண்ட ஓரா என்று ஸ்மார்ட் ரிங் மாடலுக்குரியது. அதன் சமீபத்திய மாடலான ரிங் 3 (Ring 3) சாதனம், அமெரிக்காவில் $299 டாலர் என்ற விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதுவும், 24/7 கண்காணிப்பு சென்சார்களை கொண்டது. இது 7 நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுளுடன் வருகிறது.
courtesy:https://tamil.gizbot.com/