“நான்காவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சிம்பு”
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் தன் நடிப்பின் மூலம் சிறந்த முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் தான் சிம்பு. சில காரணங்களால் சினிமா வாய்ப்பே கிடைக்காமல் இருந்த இவர் தற்பொழுது ஏற்கும் படங்களில் மாஸ் காட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பும் குவிந்த வண்ணம் இருக்கிறது. மாநாடு படத்தின் வெற்றியால் கம்பேக் கொடுத்த சிம்பு, மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார்.வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து தற்போது தனது 48வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.சிம்புவின் 48வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்கள் மூலம் மீண்டும் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. அதனால் சிம்புவின் STR 48 படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இப்படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகி பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. பத்து தல ஷூட்டிங் முடிந்ததுமே STR 48 படத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுக்க தாய்லாந்து சென்றிருந்தார் சிம்பு. அதன்பின்னர் சென்னை திரும்பிய அவர் அப்படியே லண்டன் சென்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறார். அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.ஆனாலும் STR 48 ஷூட்டிங் தொடங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இக்கூட்டணி கன்ஃபார்ம் ஆனதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் படம் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் அல்லது கொரோனா குமார் இரண்டில் எதாவது ஒன்றாக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், ஐசரி கணேஷுக்கு கால்ஷீட் கொடுக்காமல் STR 48 படத்தில் கமிட்டாகிவிட்டதால், இதுகுறித்த பஞ்சாயத்து கமல்ஹாசனிடம் சென்றதாம். இறுதியாக சிம்பு – ஐசரி கணேஷ் இருவரையும் அழைத்து கமல் பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டாராம். இந்தப் பேச்சுவார்த்தையில் இறுதியாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் சிம்பு. ஆனால், முதலில் STR 48 ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் எனவும் கமல் கூறியிருந்தாராம்.கமல்ஹாசனின் இந்த டீலிங்கிற்கு ஓக்கே சொன்ன ஐசரி கணேஷ், STR 48 ஷூட்டிங் தொடங்கலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். இதனால், கமல், இயக்குநர் தேசிங் பெரியசாமி இருவருமே மகிழ்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், விரைவில் லண்டனில் இருந்து சென்னை திரும்பும் சிம்பு, STR 48 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.
தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு மற்றும் டெக்னீசியன்கள் ஆகியோரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள். ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாராம். இதற்காக எடையை குறைத்துள்ள சிம்பு மீண்டும் எடையை அதிகப்படுத்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் பீரியட் பிலிம் ஆக எடுக்கப்படுகிறதாம். அதிலும் குறிப்பாக ஒரு சிம்பு ஒல்லியாகவும் இன்னொரு சிம்பு குண்டாகவும் காணப்பட வேண்டுமாம். அவ்வாறாயின் உடம்பை மீண்டும் ஏற்ற வேண்டிய நிலைமையில் சிம்பு இருந்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்பொழுது இருக்கும் இந்த உடல் அமைப்பில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மேலும் இக்கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் குண்டான சிம்பு கதாபாத்திரம் படமாக்க உள்ளதாம். அவ்வாறு இரட்டை வேடத்தில் சிம்பு அசத்திய படம் தான் மன்மதன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 19 வருடம் கழித்து மேற்கொள்ள போகும் படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.மேலும் கமல் தயாரிப்பில் இப்படம் 100 கோடியில் படமாக்கப்படுவதால் இதற்கான டெடிகேஷனை போட்டு வருகிறார் சிம்பு. அதுவும் நிறைய கால அவகாசம் எடுத்து படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு வருகிறார்கள். மேலும் இரட்டை வேடத்தில் தனக்கு அவரே வில்லனாகவும் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.