“மீண்டும் மரிசெல்வராஜ் வடிவேலு கூட்டணி”
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது.இந்நிலையில் உலகளவில் கடந்த 8 நாட்களில் ரூ. 52 கோடிக்கும் மேல் மாமன்னன் திரைப்படம் வசூல் செய்துள்ளது.தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்து இதுவரை உதயநிதியின் திரை வாழ்க்கையில் எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை மாமன்னன் செய்து அசத்தியுள்ளது.
தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுவதாக படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். தெலுங்கில் இந்த படத்திற்கு நாயக்குடு என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகின்ற ஜூலை 14ம் தேதி இந்த படத்தை ஆந்திர, தெலுங்கானா மாநிலத்தில் சுரேஷ் புரொடக்சன்ஸ் மற்றும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.
நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரியில் நாயகனாக நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த குணசித்ர வேடத்தில் நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தற்போது வரை 50 கோடி வசூலித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முக்கியமாக வடிவேலுவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திருப்பதோடு வித்தியாசமான வடிவேலுவை மாரி செல்வராஜ் திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
அந்த வகையில், மறுபிரவேசத்தில் மாமன்னன் படத்தின் மூலம் வெற்றி பாதையை நோக்கி மீண்டும் திரும்பி இருக்கிறார் வடிவேலு. இந்த நிலையில் அடுத்தபடியாக லைப் இஸ் பியூட்டிபுல் என்ற இத்தாலியன் படத்தை வடிவேலுவை நாயகனாக வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் மாரி செல்வராஜ். இந்த தகவலை வடிவேலுவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கும் வடிவேலு, மாமன்னனை போலவே அந்த படமும் என்னை மீண்டும் வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.