“தக்காளியைப்போல் அதிகரித்து வரும் இதற காய்கறிகளின் விலை..!”

 “தக்காளியைப்போல் அதிகரித்து வரும் இதற காய்கறிகளின் விலை..!”

 சென்னையில் தக்காளி விலை தற்போது 110 முதல் 130 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆப்பிள் போல் தக்காளி விற்பனையாக முக்கிய காரணம் வரத்து குறைவு தான். தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் விலையும் பெரிய அளவில் உயரும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.அண்மையில் வரத்து அதிகரிப்பால் சற்று குறைந்த தக்காளி விலை, அதன்பின்னர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துவிட்டது. 130 ரூபாய் வரை சில்லறை விலையில் சென்னையில் தக்காளி விற்பனையாகிறது. தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய் விலையும், இஞ்சி விலையும், சின்ன வெங்காயத்தின் விலையும்அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.அண்மையில் வரத்து அதிகரிப்பால் சற்று குறைந்த தக்காளி விலை, அதன்பின்னர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துவிட்டது. 130 ரூபாய் வரை சில்லறை விலையில் சென்னையில் தக்காளி விற்பனையாகிறது. தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய் விலையும், இஞ்சி விலையும், சின்ன வெங்காயத்தின் விலையும்அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆனால் இதே தக்காளி கடந்த 3 மாதம் முன்பு மிக கடுமையாக சரிந்தது. கோடைகாலத்தில் தக்காளி மற்றும் காய்கறி விலை கடுமையாக சரிந்தது. தக்காளியை பறிக்காமல் டிராக்டரை வைத்து விவசாயிகள் அப்படியே உழுகவும் செய்தனர். அந்த அளவிற்கு தக்காளி சிலரை கண்ணீர் விட வைத்ததால், வெறுத்து போன விவசாயிகள், தக்காளி பயிரிடுவதை நிறுத்திவிட்டனர். அதன் எதிராலி தான் அடுத்த 3 மாதத்தில் தற்போது நடந்துள்ளது.

அன்று மூட்டை மூட்டைகளாக காய்கறியை கீழே கொட்டிய விவசாயிகள், இன்று தேவை அதிகமாக இருக்கும் போது அதை விளைவிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தக்காளி மட்டுமல்ல, அனைத்து காய்கறிகளின் விலையும் கோயம்பேடு மார்க்கெட்டில் கணிசமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை உயர்வு ஏன் என்பது குறித்து கோயம்பேடு மார்க்கெட் காய் கனி மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.தியாகராஜன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அண்டை மாநிலங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வரத்து பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கடந்த சில நாட்களில் 2 மடங்கு உயர்ந்தது. தொடர்ந்து தக்காளி உயர்ந்தும் வருகிறது.

ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு (மொத்த விலையில்) கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர 2-ம் தர சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு பொதுமக்களை கவலை அடைய வைத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தே வருவதால் தக்காளி விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது என்றார். தக்காளி விலையை போலவே இதர காய்கறி விலையும் உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். அவர் இதுபற்றி கூறும் போது, “சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், நகர்ப்புற பகுதிகளில் இருந்தும் காய்கறி அதிக அளவு இறக்குமதியாகும். இங்கிருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு போகும். சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் காய்கறி கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இருந்ததுதான் விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது.

தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களில் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்தும் 40 முதல் 50 சதவீதம் வரை, அதாவது பாதியாக குறைந்திருக்கிறது. இதனால் காய்கறி விலையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தக்காளியின் விலை 100 ரூபாயை தாண்டி உள்ளது. தக்காளியை தொடர்ந்து பச்சை மிளகாய் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.70 முதல் 80 வரை விற்பனையான பச்சை மிளகாய் தற்போது 2 மடங்காக அதிகரித்து ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை ஆகிறது. இஞ்சி விலை ரூ.20 உயர்ந்து ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம், அவரை, புதினா உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்தள்ளது. மற்ற காய்கறி விலையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. வரத்து குறைபாடு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது” என்றார்- கோயம்பேடு காய்கறி விலை நிலவரம்:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்) பீன்ஸ்- ரூ.100, அவரை- ரூ.70, பாகற்காய் (பன்னீர்)- ரூ.50, பாகற்காய் (பெரியது)- ரூ.50, கத்தரி- ரூ.45, வெண்டை- ரூ.45 முதல் ரூ.50 வரை, புடலங்காய்- ரூ.35, சுரைக்காய்- ரூ.30, பீர்க்கங்காய்- ரூ.60, பச்சை மிளகாய்- ரூ.150 முதல் ரூ.160 வரை, பீட்ரூட்- ரூ.40, கேரட் (ஊட்டி)- ரூ.60 முதல் ரூ.70 வரை, கேரட் (மாலூர்)- ரூ.50, முள்ளங்கி- ரூ.50, முட்டைக்கோஸ்- ரூ.25, இஞ்சி- ரூ.220, சாம்பார் வெங்காயம்- ரூ.90 முதல் ரூ.100 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்)- ரூ.25, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா)- ரூ.20, தக்காளி- ரூ.100, சேனைக்கிழங்கு- ரூ.45, சேப்பங்கிழங்கு- ரூ.40, காலிபிளவர் (ஒன்று)- ரூ.30 முதல் ரூ.40 வரை, முருங்கைக்காய்- ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.25 முதல் ரூ.30 வரை, தேங்காய்- ரூ.20 முதல் ரூ.30 வரை, கொத்தமல்லி (கட்டு/பெரியது)- ரூ.50 முதல் ரூ.60 வரை, புதினா (கட்டு/பெரியது)- ரூ.30.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...