வளர்ந்து வரும் பெண் கவிஞர் மதுரா!

வரலட்சுமி சரத்குமார் நடித்து வெளிவந்த சேசிங் படத்திலும். 143 என்கிற படத்தில் வைரமுத்து கபிலன் அறிவுமதி சினேகன் ஆகியாரோடு இணைந்து இவரும் ஒரு பாடல் புனைந்து உள்ளார். விரைவில் திரைக்கு வரும் யாமா படத்திலும் பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிளப் ஹவுஸ் ClubHouse எனும் Non Linear மலேசிய திரை படத்தில் தீம் song உட்பட இரண்டு பாடல்களை எழுதிய மதுரா கூறும்போது இப்படம் Malasiya Book Of Records ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதை பெருமையாக குறிப்பிட்டார். மேலும் கனவுகளால் பெருத்த மனசு,விழித்திரு விடியல் விருது கொடுக்கும் என்கிற கவிதை தொப்புப்பையும் வெளியிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் இரூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மதுரா தன் தாய் தந்தையுடன் வயல் காட்டில் வேலை செய்து கொண்டே உயர் பள்ளி கல்வியையும் படித்து தனது கவி திறனை யும் வளர்த்து கொண்டார்.

பின் சென்னைக்கு வந்து தோழியுடன் தங்கி கம்ப்யூட்டர் பயிற்சி கற்று B.Lit., M.phil பட்டம் பெற்று திரை துறையில் அடி எடுத்து வைத்து ஒரு சில படங்களுக்கு பாடல்கள் எழுதி கொண்டு நல்லதொரு எதிர் காலத்துக்காக காத்திருக்கிறார் கவிஞர் மதுரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!