பிரதமர் மோடி தலைமையில் || சர்வதேச யோகா தினம்

 பிரதமர் மோடி தலைமையில் || சர்வதேச யோகா தினம்

9வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

யோகாவின் இந்தியப் பயிற்சியைக் கொண்டாடுவதற்கும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 2014 முதல் கொண்டாடப்படுகிறது. மற்றும் ஐ.நா. பொதுச் சபையால் சர்வதேச அங்கீகார தினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஐ,நா. தலையமைகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் அணியப்படுகின்றன என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை.

நேற்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி ஐ.நா.வில் இன்று நடைபெற்ற யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அந்தப் பயிற்சியில் பங்கேற்போர் அணிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டி-ஷர்ட் வழங்கப்பட்டது. அந்த ஆடைகளை திருப்பூரைச் சேர்ந்த தாய் எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினத்துக்கு பிரத்தியேக டி-ஷர்ட்டுகளைத் தயாரித்து நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது.  அதன்படி இந்தாண்டு இன்றைய தினத்தில் நடந்த யோகா பயிற்சியாளர்களுக்காக 4,150 டி-ஷர்ட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1,800 டி-ஷர்ட்கள் தயாரித்து அனுப்பினார்களாம். இந்தாண்டு 4,150 டி-ஷர்ட்கள் தயாரித்து அனுப்பியுள்ளனர். இந்த டி-ஷர்ட்களில் எஸ்.பி.ஐ. லோகோ மற்றும் யோகா தின  லோகோ பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் யோகா பயிற்சியை அங்கீகரிக்கவும், மதிக்கவும் ஒரு சர்வதேச தினம் குறித்த யோசனை முதலில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று ஐ.நா. பொதுச் சபையில் உருவாக்கப்பட்டது.  இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தின் கோடைகால சங்கிராந்தியில் வருவதால்  இந்த தேதியை முன்மொழியப்பட்டது. இந்த நாள் கோடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும். இதனை அடுத்து 11 டிசம்பர் 2014 அன்று ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இந்த முன்மொழிவுக்கு 175 உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

மனித நேயம் மலர…

2023 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் மனிதகுலத்திற்கான யோகா. யோகாவின் பல்வேறு பாணிகள் உடல் நிலைகள், சுவாசப் பயிற்சிகள் மற்றும் தியானம் அல்லது தளர்வு ஆகியவற்றை இணைக்கின்றன.

நோக்கம்

சர்வதேச யோகா தினத்தை ஒட்டிய கொண்டாட்டங்கள் யோகாவின் முழுமையான தன்மை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும் மேம்படுத்துவதற்கும் வந்தது. எனவே சிறந்த ஆரோக்கியத்திற்காக உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

யோகாவின் நன்மைகள்

யோகா இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மற்றும் தசைகளை சூடேற்றும். அதே வேளையில் நாள்பட்ட முதுகுவலியை தீர்க்க யோகா சிறந்த மருந்த்காகும். நாம் தினமும் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கலாம் மற்றும் ஆரோக்கியமான இதயத்தை பெறலாம். எனவே  நீங்களும் இதனுடன் இணைந்து, யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற மற்றவர்களையும் ஊக்குவியுங்கள்.

இந்த நாளில், அனைத்து தரப்பு மக்களும், யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்க ஒன்று கூடுகிறார்கள். யோகா பட்டறைகள், வெளிப்புற யோகா அமர்வுகள், தியானங்கள் மற்றும் யோகாவின் நன்மைகள் பற்றிய விவாதங்கள் ஈடுபடுவார்கள்.

தனிநபர்கள் யோகாவின் மாற்றும் சக்தியை ஆராய்ந்து அதை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. யோகா வழங்கக்கூடிய உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வை அனுபவிக்க உலக சமூகத்தை இது ஊக்குவிக்கிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...