“பாயும் ஒளி நீ எனக்கு” !

 “பாயும் ஒளி நீ எனக்கு” !

எஸ் பி சினிமாஸ் சார்பில் சங்கர் மற்றும் கிஷோர் வெளியிடும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு” !

கே எம் எச் புரடக் ஷன் சார்பில் கார்த்திக் சவுத்ரி தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”. இதில் விக்ரம்பிரபு, வாணி போஜன் ஜோடியாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். சாகர் இசை அமைக்கிறார். எஸ் பி சினிமாஸ் சங்கர் கிஷோர் வெளியிடுகிறார்.*

“பாயும் ஒளி நீ எனக்கு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் பத்திரிகை தொடர்பாளர் சங்க தலைவர் டைமண்ட் பாபு பிறந்த நாளையொட்டி படக்குழு முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

விக்ரம் பிரபு பேசிய தாவது:

இந்தவொரு நல்ல டீமோடு நிறைய ஹார்டு ஒர்க் செய்தது ரொம்ப சந்தோசம். இயக்குநர் கார்த்திக் ரொம்பவும் சினிமாவில் ஆர்வம் உள்ளவர். அவருடன் பயணம் தொடங்கி நீண்டநாள் சென்றது. இந்த படத்தில் எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர் புரிந்து கொண்டு பணியாற்றினார். அவர் பேச்சிலேயே அது தெரிந்திருக்கும். இந்த பட அனுபவம் என்றைக்கும் மறக்காது அப்படிப்பட்ட படம் இது.

இன்று இயக்குனர் கார்த்திக் சொன்ன ஒரு விஷயம்தான் அதாவது கண்ணுக்கு தெரியற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது, கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இவன் வேற மாதிரி படத்திலிருந்து நன்றாக தெரியும் . இன்றைக்கு படத்தில் மாஸ்டராக இருக்கிறார்.

எல்லா சண்டை காட்சி களையும் நன்றாக எடுத்திருக்கிறார். என் மனத்துக்கு நெருக்க மான படம்.
இந்த படத்தை வெளியிடும் கிஷோருக்கு நன்றி. நாங்கள் நல்ல படம் தந்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை.

இயக்குனர் கார்த்திக் அத்வைத் பேசியதாவது:

நான் ஹைதராபாத் திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது. ஒரு முதல் பட இயக்குனருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும் யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை அதற்காக விக்ரம் பிரபுக்கும் குழுவின ருக்கும் நன்றி. நாயகி வாணி போஜனுக்கும் நன்றி.

ஒளிப்பதி வாளருமக்கு எனது நன்றி. என்னுடைய எண்ணத்தை
புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசிக்கும் நன்றி
கேரக்டரை புரிந்துக் கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார். படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும். படத்தில் பணியாற்றிய எடிட்டர் சி. எஸ். பிரேம்குமார் நடன இயக்குனர் தாஸ்தா, படத்தை ரிலீஸ் செய்யும் கிஷோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...