இதைச் செய்தால் ஆஸ்துமா வராது
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் கடைப்பிக்கப்படுகிறது. இதன் நோக்கம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களின் சுகாதார நிலையைப் பேணிப் பாதுகாப்பதாகும்.
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோய் (Chronic Inflammatory Disease) என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வாமையின் காரணமாக சிலருக்கு மூச்சுக்குழாய், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பினால் ஆஸ்துமா ஏற்படுகிறது. இதை இளைப்பு நோய் என்றும் அழைக்கலாம்.
1993ஆம் ஆண்டு முதல் ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சியால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகளாவிய ஆஸ்துமா விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் உலகளவில் நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர நாடுகளில் இந்நிலை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்துமாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், உள்ளிழுக்கும் சுவாச மருந்துகளால் அதைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதனால் ஆஸ்துமா உள்ளவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ உதவுகிறது.
ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசுதான். கடந்த ஐந்தாண்டுகளில் ஆஸ்துமா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துவிட்டது. உலகம் முழுவதும் 30 கோடி மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட உள்ளனர். அதில் 6 முதல் 7 வயதுக்குட்பட்ட 11.6 சதவிகிதம் பேர் குழந்தைகள். இந்தியாவில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உரிய மருந்தும், சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை என இந்திய மார்பு சங்கம் (Indian Chest Society) குறிப்பிடுகிறது.
ஆஸ்துமா என்பது மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாசக் குழாய்களை பாதிக்கும் நோய். இது அதிகப்படியான சளியை உருவாக்கும். இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். மூச்சுத் திணறல் இருந்தால் ஆஸ்துமா அறிகுறியாக இருக்கலாம். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அது தீவிரமடைந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
ஸ்பைரோமீட்டர் கருவி மூலம் மூச்சுக் காற்றை வைத்து அறிந்துகொள்ளலாம். 50 முதல் 80 சதவிகிதம் வரை இருந்தால் மத்திய நிலை. 50க்கும் கீழே இருந்தால் அதிகமாக உள்ளதென அர்த்தம்.
ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோய். ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஒருமுறை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த பாதிப்பு இருக்கும்.
ஆஸ்துமா என்பது உட்புற, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையினால் உருவாகும் விளைவு. இது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவாது.
இது ஒரு தொற்று நோயல்ல. சிலர் தொற்று நோயான காச நோய்க்கும் (Tuberculosis), ஆஸ்துமாவுக்கும் வித்தியாசத்தை அறியாமல் இருக்கின்றனர். அது தவறு.
எரிவாயு மாசு மாசு ஏற்படுத்துகிறது. நகரமயமாதலால்தான் ஆஸ்துமா அதிகரித்து வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அருகருகே உள்ள ஏ.சி. காற்றும் மாசு ஏற்படுத்தும். ஒரு வீடு இருக்கும் இடத்தில் 50 பிளாட்கள் கட்டப்படும்போது சுற்றுச்சூழல் உள்கட்ட மாசுவாக மாறுவிடுகிறது.
ஆஸ்துமா கண்டவர்கள் நடை பயிற்சியை அவசியம் செய்யவேண்டும். அதேபோல் மூச்சுப் பயிற்சி செய்துவது நல்லது. சிகரெட் புகைக்கக் கூடாது. புகைப்பவர்கள் அருகில் நிற்கக் கூடாது.
சுத்தமான, சுகாதாரமான சுவாசத்தை உள்வாங்குவதால் நுரையீரலின் செயல்பாடுகள் அதிகரிக்கும். அதனால் மரம், செடிகள் உள்ள இயற்கையான இடங்களில் இருப்பது, வசிப்பது நல்லது.