எஸ்.வி.சகஸ்ரநாமம் 109வது பிறந்த தின விழா

 எஸ்.வி.சகஸ்ரநாமம் 109வது பிறந்த தின விழா

நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர்.

தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்.

எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் 109வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக விவேகானந்தா அரங்கில் கடந்த வாரம் நடந்தேறியது.

மாண்புமிகு நீதி அரசர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையேற்று நடிகர் மௌலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், வெங்கட்டுக்கு சிறந்த நாடக ஆசிரியர் என்ற முறையில் கலைக்களஞ்சியம் எனும் எஸ்.வி.எஸ். நினைவு விருதும் வழங்கித் தலைமையுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு திரிசக்தி சுந்தர்ராமன் முன்னிலை வகித்தார். விருது பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகை  குமாரி சச்சு வாழ்த்துரை  வழங்கினார்.

S.V.S. குமார், கலைமாமணி P.R. துரை, S.V.S. விழா குழுவின் பொருளாளர் C.A. ராஜா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

எஸ்.வி.எஸ்.சின் கலை வாழ்க்கை

சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் குடும்பத்தின் ஐந்தாவது குழந்தையாய் பிறந்த இவரை அவரது தந்தையாரே நாடகத்துக்குத் தத்துக் கொடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. ஷண்முகம், டி.கே. பகவதி என்கிற நால்வரும் இவரைக் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் அணைத்துக் கொண்டனர். நாடகக்கலையின் பல்வேறு நுணுக்கங்களை அவர் அங்கேதான் கற்றார். வீரபத்திரன் என்கிற பழைய நாடக நடிகரிடம் பாடல் கற்றுக் கொண்டார்.

தன் நாடகப் பயிற்சியின் குருநாதர் என்று அவர் குறிப்பிடுவது, நடிகர் எம்.கே. ராதாவின் அப்பாவான எம். கந்தசாமி முதலியாரைத்தான். அவரிடம் பயின்ற மூன்றே மாதங்களில் ‘அபிமன்யூ சுந்தரி’யில் சூரிய பகவானாக வேஷங்கட்டினார்.

நடிப்பதில் மட்டுமன்றி சில கலைகளில் விற்பன்னராகவும் சில கலைகளில் பரிச்சயமுள்ளவராகவும் இருந்துள்ள எஸ்.வி. எஸ்.,
பாரதியைப் போல் படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் எஸ்.வி.எஸ்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...