இனி இந்தியில் எம்.பி.பி.எஸ். படிக்கலாம்

 இனி இந்தியில் எம்.பி.பி.எஸ். படிக்கலாம்

இந்தியாவில் மருத்துவப் படிப்பு ஆங்கிலத்திலேயே இதுவரை இருந்து வந்த நிலையில் அதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இந்த ஆண்டு முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு இந்தியில் பாடப் பிரிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்ட மாக நாட்டில் முதன்முறையாக, மத்தியப்பிரதேசத்தில் இந்தியில் எம்.பி.பி. எஸ் படிப்பை இன்று தொடங்கி வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.  இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித் ஷா, ‘இந்நாள் இந்திய கல்வித்துறைக்கு மிக முக்கியமான நாள்’ என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவில் பல ஆண்டுகளாக மருத்துவக் கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய திட்டம் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்கவோ, கற்பிக்கவோ முடியாது என்ற எண்ணத்தை இது மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 5,568 மணி நேர முயற்சி போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில், இந்தாண்டு பிப்ரவரியில் மந்தர் என்ற இந்திப் பிரிவு அமைக் கப்பட்டு, எம்.பி.பி.எஸ். பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தக் குழுவில் இடம் பெற்ற 97 மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், நிபுணர்கள் 5,568 மணி நேரம் கடும் முயற்சி செய்து இதை உருவாக்கி உள்ளனர்.

மத்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுவதாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படு கிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் பாடப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு, இந்தியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதி யியல் ஆகிய மூன்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தி யில் கற்பிக்கப்படவுள்ளன.

அமித்ஷா மேலும் பேசும்போது “இனி கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழி தெரியவில்லை என்ற எந்தவிதத் தாழ்வுமனப்பான்மையும் இருக்காது. அவர்கள் தங்கள் சொந்த மொழியில் பெருமையுடன் படிக்கலாம். தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியில் எம்.பி.பி.எஸ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பிற மொழிகளிலும் இது தொடங்கப்படும். மேலும் எட்டு மொழிகளில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 51,000 இடங்கள் இருந்தன. இப்போது 596 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 89,000 இடங்கள் உள்ளன. நாட்டில் முன்பு 16 இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தன. இப்போது எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (ஐ.ஐ.எம்.) எண்ணிக்கை 13 முதல் 20 ஆகவும்,  பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 723-லிருந்து 1043 ஆகவும், இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது. 9 முதல் 25 வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.ஐ.டி.) உருவாகியுள்ளது” என்று பேசினார்.

ஆனால் இந்தியில் மருத்துவப் படிப்பு என்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாள ரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இத்தகைய பின்னணி கொண்ட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க வருவார்கள். தமிழ்நாடு, கேரளா என தென்மாநில மாணவர்கள் இந்தியில் சரளமான பேச்சுத்திறன் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தும்.

எம்.பி.பி.எஸ். என்பது அடிப்படை பட்டப்படிப்பு அல்ல. உயிராபத்தான சூழலில் டாக்டர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராந்தி யத்தில் மட்டும் டாக்டர்கள் பணியாற்ற முடியாது. அவர்கள் பிற வாய்ப்பு களையும் தேட விரும்புவார்கள். இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேல்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சி நடத்தவோ முடியாது.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத்துவப் பத்திரிகை கள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை டாக்டர்கள் பின்பற்ற வேண்டும். அவை ஆங்கிலத்தில்தான் உள்ளன.

வெறும் எம்.பி.பி.எஸ்.சுடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த உடனேயோ, பின்னரோ அவர்கள் உயர்படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள் மாநில மொழிகளில் வரவேண்டிய தேவை ஏற்படும்” என்றார்.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *