உதிரம் உரையவைக்கும் வ.உ.சி.யின் உயில்

 உதிரம் உரையவைக்கும் வ.உ.சி.யின் உயில்

நினைவுகூரத்தக்க தலைவர் வ.உ.சி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கைசுத்தமாக இருக்கவேண்டும். பிறர் சொத்தில் கைவைக்கக்கூடாது. தன் சொத்து விவரம் வெளிப்படையாக இருக்கவேண்டும். இந்த அத்தனைத் தகுதியையும் பெற்ற தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவரது 151வது பிறந்த நாள் செய்தி.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் தம் கடைசி நாட்களில் எழுதிய உயிர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போரில் வெள்ளை யர்களே மிரளும் அளவுக்கு வக்கீல் தொழிலையும் விட்டு கப்பல் நிறுவனத் தைத் தன் கைக்காசைப்போட்டும் பிறரிடம் வசூலித்தும் வெற்றிகரமாகத் தொடங்கிய அவர், பின்னாட்களில் எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தார் என்பதை இந்த உயில் காட்டுகிறது. உதிரத்தை உரைய வைத்து நெஞ்சம் அடைத்து கண்களில் நீர் பெருக்கெடுக்கும் இந்த உயிலை வெளியிட்டிருப்பவர் செ.திவான். (சுஹைனா பதிப்பகம், 106-எப்-4ஏ, திருவ னந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி).

தூத்துக்குடியிலிருக்கும் மகாஸ்ரீ அ.செ.சு.கந்தகவாமி ரெட்டியார் அவர் களுக்கு தூத்துக்குடியிலிருக்கும் வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிக் கொடுத்த உயில் சாசனம் நிருபம்.

அன்பார்ந்த ஐயா, ‘நமஸ்காரம். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கடவுளையும் தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர இவ்வுலகத்தில் வேறு தஞ்சம் ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரிய வில்லை. நான், இனிமேல் அதிக காலம் ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழி இல்லை. எனது குடும்ப நிலைமையையும் தாங்கள் முன்னின்று என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய காரியங் களையும் இதன் கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் கீழ்வரும் காரியங்களைச் செய்து முடித்துக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாற்றி யருளும் படியாகத் தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து கேட்டுக்கொள் கிறேன்.’

எனது சொத்துக்கள்

எனக்கும் எனது மூத்த மகன் ஆறுமுகம் பிள்ளைக்கும் பாகவிஸ்திரமாகி பல வருஷங்களாகின்றன. அந்த தாஸ்தாவேஜூ என் மனைவியிடமிருக் கின்றது.

பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும், ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும் எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறுக்கு மேல் எனக்கு லாபம் (Profits) கிடைக்கக்கூடும். ஆனால் நான் ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறு கடன் வாங்கி இருக்கிறேன். கடனுக்கும் லாபத்திற்கும் அனேக மாகச் சரியாய் போகும். இரண்டு கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியமும் (Premium) வட்டியும் கட்டப்படவில்லை. அது கட்டப்பட வேண்டும். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகையையும் பல வருஷங்களுக்கு முன்னே என் மனைவி பேருக்கு டிரேன்ஸ்பர் செய்து வைத்திருக்கிறேன். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகைகள் தவிர என் பாகத்திற்கு ஓட்டப் பிடாரத்து எனது பெரிய புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும் பதினாறு மரக்கால் நஞ்சையும் அதன் பக்கத்தில் கிணற்றுத் தோட்டம் என்ற ஒரு நிலமும் இருக்கின்றன. இது தவிர ஒட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 13/4  சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும் ¾ சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும் இருக்கின்றன. என் மக்களால் அவ்வளவு தூரத்திலுள்ள அந்த இரண்டு புஞ்சைகளையும் பயிர் செய்துகொள்ள முடியாது. அவற்றை ரூபாய் ஐந்நூறுக்கு தங்கள் பேருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒட்டப்பிடாரத்தில் ஒரு பழைய கரைகட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக் கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலை மையில் இருக்கின்றன. மேற்படி மச்சைப் பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் மூன்றடி உயர்த்தி தேக்கு மரக் கட்டை போட்டும் மேல் பக்க முள்ள இரண்டு சன்னல்களுக்கு நேராக கீழ்ப் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்தும் அரை வீட்டை எடுத்து தாங்கள் புதுப்பித்து கொடுக்க  அப்படி செய்தபின் அவ்வீட்டில் என் மனைவி மக்கள் குடியிருந்து வரலாம். ஆத்தூர் பிரமு அம்மாள் ரூபாய் எழுநூற்றைம்பதுக்கு என் மனைவி பேருக்கு ஒரு அடமான தஸ்தாவேஜ் எழுதிக் கொடுத்திருக்கிறாள். அடமானச் சொத்துக் கள் தங்களுக்கு முந்திய அடமானம். அடமானச் சொத்துக்கள் சுமார் ரூபாய் இரண்டாயிரத்துக்கு விலை போகும். என் மனைவி அடமான தஸ்தா வேஜை தங்கள் பேருக்கு மேடோபர் வாங்கிக்கொள்க. அதற்கு வசூலாகும் தொகையையும் மேலே கண்ட என் புஞ்சைக் கிரயம் ரூபாய் ஐநூறும் அவசியமானால் என் மைத்துனன்மார் குடும்பத்திலிருந்து என் குடும்பத் திற்குக் கிடைக்கக்கூடிய ரூபாய் 1500-ம் நான் தங்களிடம் பற்றி வருகிற தொகைக்கு ஈடு செய்து கொள்க. இப்பொழுதும் ரூபாய் இருநூறு விலை போகக்கூடிய சட்டப் புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன. அவற்றை விற்க வேண்டும்.

எனது கடன்கள்

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் லிமிடெட்டுக்கு ஐந்து மாத வீட்டு வாடகை ரூபாய் (135)

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி சுமார் ரூபாய் (30)

வன்னியங்செட்டியார் எண்ணெய் கடைக்கு சுமார் ரூபாய் (30) சில்லரைக் கடன் ரூபாய் (60).

இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ.20 சோமநாத்துக்கு ரூ.16. வேதவல்லிக்கு ரூபாய் 50. ஆக மொத்தம் ரூபாய் (86).

எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குச் சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்போது செய்ய வேண்டிய அவசரக் காரியம் ருதுவாயிருக்கிற என் மக்களிருவரில் மூத்தவளாகிய சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மா ளுக்கு விரைவில் கலியாணம் செய்து வைக்க வேண்டும். சரியான மாப்பிள்ளை கிடையாததால் தாமதம். இப்போது சுமார் ரூபாய் ஐநூறுக்கு அவளிடத்தில் நகைகள் இருக்கின்றன. இன்னும் ரூபாய் ஐநூறுக்கு அவ ளுக்கு நகை போட வேண்டும். கலியாணப் பந்தல் செலவு ஒரு வருஷத்து சீர் சீராட்டு செய்யவும் வேண்டும். அவற்றிற்கு ஒரு கம்பெனி இன்ஸ்யூ ரன்ஸ் பணம் 1000-மும் சரியாய் போகும். சௌபாக்கியவதி மரகதவல்லி அம்மாள் கலியாணத்தை இன்னும் இரண்டு வருஷம் கழித்து நடாத்தி வைக்கலாம். அவளுக்கும் அவளிடமிருக்கிற நகைகளைச் சேர்த்து ரூபாய் ஆயிரத்துக்கு நகை போட வேண்டும். ஒரு வருஷத்து சீர் சீராட்டும் செய்ய வேண்டும். அவற்றிற்கு மற்றொரு கம்பெனியின் இன்ஸ்யூரன்ஸ் பணம் ரூபாய் 1000-மும் சரியாய் போகும். என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகள் எல்லாம் தாங்களே வாங்கி வைத்திருந்து கோவாப்பிரேட்டிவ் சொஸைட்டியில் கொடுக்கிற கரண் டிபாஸிட் வட்டி போட்டு கொடுத்துவர வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுடைய அன்ன வஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டுபண்ண நான் முயலுகிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்ன வஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன.

மனைவியுடன் இளம் வயது வ.உ.சி.

மைத்துனன்மார் காரியம்

வீரபாண்டியன் பட்டணம் பூபாலராயன் இடமிருந்து ரொக்கமே வாங்க வேண்டும். சொத்து ஒன்றும் வாங்கக்கூடாது. திருச்செந்தூர் உண்டியல் கடை சரசிணை ஐயர் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மாத்திரம் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தால் அவரிடமிருந்து என் மைத்துனன்மார் அடமா னத்தை விடுதலை செய்து தஸ்தாவெஜ் எழுதி ரிஜிஸ்டர் செய்து வாங்க வேண்டும். அவர் ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறுக்கு சம்மதிக்காவிட்டால் அவர் நம்பர் போட்டுக்கொள்ளும்படி விட்டுவிட வேண்டும். என் மைத் துனன்மார் சகோதரியாகிய சௌபாக்கியவதி ஆறுமுகத்தம்மாளுக்கு நகைப் பாவத்து வகைக்கு கொடுக்கவேண்டிய ரூபாய் ஐந்நூறு அவள் இஷ்டப்படி ரொக்கமாகவோ, நகையாகவோ கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டியது. என் மைத்துனன்மார்கள் பெரும் செலவாளிகளாய் இருக்கிறபடியால் பாக்கித் தொகையில் யானையப்ப பிள்ளை சத்திரத்துப் பக்கத்தில் மரக்கால் ஒன்றுக்கு ரூபாய் நூறு விலைக்கு நல்ல நஞ்சை கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் மூன்று கோட்டை விரப்பாடு தங்கள் பேருக்கு கிரயத்திற்கு வாங்கி அவற்றையும் பாக்கி தொகையையும் என் மைத்துனன் மூவரும் மூன்று பங்கு வைத்து தங்கள் மனைவி மக்களுடன் அவர்கள் யாதொரு வில்லங்கத்திற்கும் உள்படுத்தாமல் அனுப வித்துக் கொள்ளும்படிக்கும் அவர்கள் மக்கள் மெஷார் (மேஜர்) யடைந்த பின் அவர்கள் சர்வ சுதந்திர பாத்தியமாக அனுபவித்துக் கொள்ளும்படி தாங்கள் அவர்களுக்கு. நன்கொடை தஸ்தாவேஜ் எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுக்க வேண்டும். என் பெரிய மைத்துனன் கப்பிரமணிய பிள்ளை ஒருக்கால் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லையானால் அவன் பாகச் சொத்துக்களை அவனுடைய சகோதரர் இருவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து நன்கொடை தஸ்தாவேஜில் எழுதி வைக்க வேண்டும். ஆனால் எனது பெரிய மைத்துனன் தனது வீட்டை வில்லங்கம் செய்யாத காலம் வரையில் அவன் அன்னவஸ்திர செலவிற்கு அவன் பாகச் சொத்துக் களிலிருந்து மற்றைய இருவரும் நபர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து வீதம் ரூபாய் பத்து மாதம்தோறும் கொடுத்துவிட வேண்டும். திருச்செந்தூர் வீடு களில் தெற்கு வீடு சுப்பிரமணியத்துக்கும் வடக்கு வீடு வெங்கிடா சலத்திற்கும் சேர வேண்டும். வடக்கு வீட்டிற்கு எதிரேயுள்ள காலிமனை தான் மைனா குஞ்சரத்திற்குச் சேரக்கூடியதாக இருக்கிறது. வடக்கு வீட்டையும் தெற்கு வீட்டையும் கிரயம் போட்டு தெற்கு வீட்டிற்குப் போகும் கிரயத்தில் அதிகப்படும் தொகையை வெங்கிடாசலத்திற்கும் சுப்பிரமணி யன் சொத்துக்களிலிருந்து கொடுக்க வேண்டும். குஞ்சரம் வீடு கட்டுவதற்கு ரூபாய் இவ்வளவு என்று இப் பொழுதே தீர்மானித்து மற்றைய இருவரும் அவருக்குச் செலுத்திட வேண்டும். 19 பனை புஞ்சையையும் சமமாகப் பங்கிட்டு மூன்று பேருக்கும் கொடுத்துவிட வேண்டியது. மைனர் குஞ்சரத் திற்கு கார்டியனாக வெங்கிடாசலத்தையும் மேற்படியார் அத்தான் சண் முகம் பிள்ளையும் நியமித்து அவனுடைய வரவு செலவுகளுக்குச் சரியான கணக்கு வைத்திருந்து அவன் மெஷாரடைந்தபின் சொத்தையும் கணக்கை யும் அவனிடம் ஒப்புவிக்கும்படியாக நன்கொடை தஸ்தாவேஜில் எழுத வேண்டும். பூபாலராயரிடமிருந்து தொகை பூராவும் வசூலாகிவிட்டால் அவருக்குத் தாங்களும், நான்…… (இந்த இடத்தில் ஒரு வரி சிதிலமடைந் துள்ளது) ரூபாய் 1500-ம் நான் என் மைத்துனன்மார் குடும்பத்திற்கு சென்ற பத்து வருஷமாகப் பாடுபட்டு வந்ததற்கு பிரதிபிரயோஜனமாக என் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும். பூபாலராயரிடமிருந்து வரவு வந்திருக்கிற தொகைக்கும் பற்றாயிருக்கிற தொகைக்கும் பேரேட்டுபடி ஒரு நகல் தயார் செய்வித்து கூடிய விரைவில் எனக்குக் கொடுக்கும்படி உத்தரவு செய்க. இதன் பிரதி ஒன்று என் மனைவியிடமும் மற்றொன்று என் மைத்துனன் வெங்கிடாசலமிடமும் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாம் வல்ல இறைவன் அருளால் மேற்கண்ட காரியங்கள் எல்லாம் தாங்கள் இனிது செய்து முடித்து அருள்புரிக.

வ.உ.சிதம்பரம் பிள்ளை

தூத்துக்குடி

26-10-1936

வ.உ.சி.யின் வறிய நிலையைச் சொல்லும் இன்னொரு கடிதம்

பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்
V.O.Chidambaram பிள்ளாய் KOILPATTI, S.I.R.

PLEADER 6-6-28
“அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

சேமம். சேமத்துக்குக் கோருகிறேன்.

நாகப்பட்டணத்திலும், கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லாருக்கும் அசந்தோசத்தை உண்டு பண்ணியது. ஒருவாறு இரண்டிடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம். இப்பொழுது உங்கள் உடம்பு பூரண சவுக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால் நீங்கள் எப்பொழுது சென்னைக்குச் செல்லுதல் கூடும். என் மகன் school final examinationல் தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்கவைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்டுமெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக் கிறேன். தகுதியான சிபார்சு இருந்தால், முதலிலேயே Inspector ஆகலாம். சாதாரண சிபார்சு இருந்தால் முதலில் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபார்சு நமக்குக் கிடைக்குமா என்பதைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள,

வ.உ.சிதம்பரம்” வெள்ளையனை எதிர்த்து பல ஆயிரங்களைச் சேகரித்து கப்பல் வாங்கி ஓட்டிய வ.உ.சி.க்கு தன் மகளை மேற்படிப்பு வைக்கமுடிய வில்லை என்கிற நிலை யாருக்கும் வரக்கூடாது. இந்த மாதிரி தலைவர் களைத்தான் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று என்பதுதான் வருங் கால நல்ல எதிர்காலத்துக்கு நல்லது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...