ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவின் சிறப்புப் பார்வை

 ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவின் சிறப்புப் பார்வை

ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பை கோகுலாஷ் டமி என்று இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் கொண் டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறும். இது அனைத்து சமுதாய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

வட இந்தியாவில் ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம் பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுகளை நடிப்பதாகும்.

மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணெய்த்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு) அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல் கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண் ணெய்த்தாழியை அடைந்தவர்களுக்குப் பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை 1982ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

ஸ்ரீகிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங் கள் படைக்கப்படுகின்றன.

அன்றைய நாளில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் தெரிந்து கொள்வோம்.
செய்யக்கூடாதவை:
இந்த நாளில் மாலை வரை குளிக்காமல் இருப்பது தவறு.  வீட்டில் தரித் திரம் உண்டு பண்ணும்.  கசப்பு நிறைந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். எனவே, கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்பு உணவுகளைச் செய்து கொடுக்க வேண்டும்.  இந்த நாளில்  பெரியோர்களிடம் சண்டை, சச்சரவு களைத் தவிர்க்க வேண்டும். இரவல் அல்லது கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் வேண்டிய புகழ், செல்வம், பிள்ளை வரம், பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, நிர்வாகத் திறமை, அறிவாற் றல் அனைத்திலும் சிறந்து விளங்க முடியும்.

செய்யக்கூடியவை
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்தமான வெண்ணெய், அப்பம், பொரி, அவல், வெல்லம், சீடை, கொழுக்கட்டை உள்ளிட்ட நைவேத் தியங்களைப் படைத்து  பூஜை செய்ய வேண்டும்.  ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதிக்கு கிருஷ்ணர் பிறப்பதாக ஐதீகம்.

அரிசி மாவால் வாசற்படியில் ஆரம்பித்து பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானைச் சென்றடையும் வரை அவருடைய திருப்பாதங்களை வரைய வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது ரொம்பவும் சிறப்பானது. அன்றைய நாளில் பூஜை செய்து பகவத் கீதை வாசிப்பது, கிருஷ்ண புராணம், கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை உச்சரிக்க வேண்டும். குழந்தை களுக்கு கண்ணன், ராதைபோல அலங்கரித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழி பாட்டு முறை குழந்தைகளின் கல்வி, உடல்நலனுக்கு நல்லது.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு சீடைதான் பிரதான பலகாரம். அதனால் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 1/2 கப்
தேங்காய் துருவியது – 1/2 கப்
கறுப்பு வெல்லம் – 1 கப்
கறுப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப்
எண்ணெய் – வறுக்க
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
பச்சரிசியை இரண்டு முதல் மூன்று மணி வரை நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் தண்ணீர் வற்றி உலர வைத்து தண்ணீர் வற்றியதும் மிக்ஸியில் மைய, மாவு பதத்தில் அரைக்கவும்.
அரைத்ததும் ஜல்லடையில் மாவைப் பொடித்துக்கொள்ளவும். இதனால் உதிரி மாவுகளைத் தவிர்க்கலாம். அடுத்ததாக வெல்லத்தை கடாயில் உருக வையுங்கள். வெல்லம் உருகுவதற்கு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்று வது போதுமானது. கெட்டிப் பதத்திற்கு உருக வைக்காமல் கட்டிகளின்றி முற்றிலும் உருகிவிட்டாலே இறக்கி விடவும். அடுத்ததாக எள்ளை கடாயில் வறுத்துக்கொள்ளவும். எள்ளை மாவில் கலந்துகொள்ளவும். அடுத் ததாக உருக்கிய வெல்லத்தை ஊற்றி மாவை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். அதோடு துருவிய தேங்காயையும் போட்டு கலக்கவும்.

ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகமாகத் தெரிவதுபோல் இருந்தால் வெள்ளை வேட்டியில் மாவைச் சுற்றி வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் தண்ணீர் வற்றிவிடும். சீடை இன்னும் சிறப்பாக வரவேண்டு மெனில் சீடை சுடுவதற்கு ஒரு நாள் முன் தினமே மாவை பிசைந்து வைத்து மறுநாள் சுட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

பிசைந்த மாவை கோலி அளவில் உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய் தொட்டுக்கொள்ளவும்.
அடுத்ததாக எண்ணெயைக் கடாயில் ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். காய்ந்ததும் உருடைகளை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.
பொன்னிறமாக வந்துவிட்டதே என உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக் குள் மாவு வேகாமல் இருக்கும். வறுக்கும்போது சில சமயம் உருண்டைகள் வெடிக்கலாம். எனவே பார்த்துப் பதமாக செய்யவும்.

ஆலயங்கள்
தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற பஞ்ச கிருஷ்ண தலங்கள் உள்ளன. பஞ்ச கிருஷ்ண தலங்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். திருக் கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, திருக்கபிலஸ்தலம்ஆகிய இந்த ஐந்து ஸ்ரீகிருஷ்ணர் ஆலயங்களும், மகா விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் அடங்கும்.

இந்தக் கோவில்கள் அனைத்தும் காவிரி ஆற்றங்கரையில் மற்றும் அதன் கிளைகளின் கரை களில் அமைந்துள்ளன. மேலும், ஸ்ரீ கிருஷ்ணர்தான் உற்சவ மூர்த்தி, எல்லா பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும், ஊர்வல மாகக் கொண்டு செல்லப்படுவார். தமிழ்நாட்டின் பஞ்ச கிருஷ்ண ஆலயங் கள் போல, வட மாநிலத்தில் பஞ்ச துவாரகா என்று ஐந்து கிருஷ்ணர் கோவில்கள் பிரசித்தி பெற்றவை.

பூஜையை முடித்து கிருஷ்ணர் சந்நிதிக்குச் சென்று வணங்கிவரலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...