“மாணவர் மனசுப் பெட்டி, ஆசிரியர் மனசுப் பெட்டிகள் வைக்கப்படும்” -கல்வி அமைச்சர் அறிவிப்பு

 “மாணவர் மனசுப் பெட்டி, ஆசிரியர் மனசுப் பெட்டிகள் வைக்கப்படும்” -கல்வி அமைச்சர் அறிவிப்பு

“எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ என்னைப் பார்ப்பதற்காக எந்த ஆசிரியரும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம். மாணவர்களின் பிரச் சினைகளை அறிய, மாணவர் மனசுப் பெட்டி போல, ஆசிரியர்களின் பிரச்சினை களை அறிய ஆசிரியர் மனசு என்னும் பெட்டி எனது அலுவலகத்திலும், வீட்டி லும் வைக்கப்படும். ஆசிரியர்கள் உங்கள் கோரிக்கைகளை அப்பெட்டியில் போட்டுவிட்டு செல்லுங்கள். நானே உங்களைத் தொடர்புகொண்டு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்” எனப் பேசினார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்போடு காத் திருந்த ஆசிரியர்கள் சமீபகாலமாக தொழில்நுட்பப் பிரச்சினைகள், புள்ளி விவரங் கள், ஆசிரியர் பற்றாக்குறை என கற்பித்தல் பணியில் மிகுந்த சவால்களோடு கடக்கின்ற சூழலில், கடந்த வாரம் கோயம்புத்தூரில் கே.பி.ஆர்.  கல்லூரியில் கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய ‘ஆசிரியர்களுடன் அன்பில்’ என்ற நிகழ்ச் சியில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, “எனக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்பது கல்வித்துறை அமைச்சராவ தற்குப் பின்னர் ஏற்பட்டதல்ல, எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு ஆசிரியர்களுடனான தொடர்பும், மரியாதையும் இன்னமும் இருந்து வருகிறது. ஆசிரியர்கள் வாழும் தெய்வங்கள், ஒவ்வொரு மாணவர்களுக்கும் நல்ல எதிர் காலத்தை அமைத்துக் கொடுக்கும் சிற்பிகள்.

நான் தொடக்கப்பள்ளி படிக்கும்போது என் கை பிடித்து எழுதக் கற்றுக் கொடுத் ததும் ஆசிரியர்கள்தான், நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது  உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு, தொடர்ந்து படி என ஊக்கப்படுத்தியதும் ஆசிரியர்கள்தான். சட்டமன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப் பினராக நான் இருந்தபோதே, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்ட இதே கல்வியாளர் சங்கமம் நிகழ்வில், வரும் தேர்தலில் காட்சி மாறும், ஆட்சி யும் மாறும் அப்போது எங்கள் துறைக்கு நீங்கள் அமைச்சராக வருவீர்கள்” என்று சொன்ன சிகரம் சதிஷ் ஓர் ஆசிரியர்.

அங்கு  என்னை வாழ்த்தி, என்மீது அன்பு காட்டிய ஆயிரக்கணக்கான நபர்களும் ஆசிரியர்கள்தான். இவ்வாறு எனது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் ஆசிரியர் களின் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. எனக்கு ஆசிரியர்களின் ஆசிர் வாதம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. எனக்கு முதல் வகுப்பில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் முதல் இன்று  நம் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள்  வரை அனைவருமே எனது  மரியாதைக்குரியவர்களே! துறையின் அமைச்சர் என்கிற முறையில் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பிற்கும் நானே பொறுப்பாவேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைத்து சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிரச்சினைகளை நான்  கேட்டறிந்தேன். காலை 9 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் இரவு 11 மணி வரை நடந்தது. அனைத்து பிரச்சினைகளையும் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளோம். அனைத்து பிரச்சினை களையும் உடனடியாகத் தீர்க்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. 

கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் மட்டுமல்லாமல், கல்வித்துறையிலும் ஏற் பட்ட குழப்பங்களையும், சீர்கேடுகளையும் தற்போதுதான் சரிசெய்து கொண் டிருக்கிறோம். அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு ஆசிரியர்களின் கோரிக்கை கள் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும். கண்டிப்பாக அனைத்து பிரச் சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.  வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பித்தலில் முழுமையாக ஈடுபடும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள பெரும் பாலான பதிவேடுகள் குறைக்கப்பட்டுவிட்டன.

EMIS இணையத்தில் உள்ள பிரச்சினைகளும் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டிற்குள் தற்போது உள்ள சிறு சிறு குறைகளும் சரிசெய்யப் பட்டுவிடும். எல்லாவற்றையும் கடந்து, ஆசிரியர்கள் தாங்கள் களத்தில் சந்திக் கும் பிரச்சினைகளையும் நேரடியாக அறிய வேண்டும் என்றுதான் இந்த ஆசிரியர் களுடன் அன்பில் என்னும் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றேன்.

இனி மாதத்திற்கு இரண்டு மாவட்டங்கள் என்னும் அடிப்படையில் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி உங்களது குறைகளைக் கேட்டு அவற்றை களைவதற்கு உரிய அத்தனை நடவடிக்கைகளையும் நான் உடனடியாக மேற்கொள் வேன்.

ஆசிரியர்களாகிய உங்களது பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தீர்த்து வைப்பதை முக்கியப் பணியாகக் கொள்ள வேண்டும் என முதல்வரும் எனக்கு உத்தரவிட்டு இருக்கின்றார். ஆசிரியர்களுக்கு முத்தமிழறிஞர் வழியில் நின்று அத்தனையும் செய்துதரும் அரசாக தமிழ்நாடு அரசு திகழும். ஆசிரியர் களுடன் அன்பில் என்பதும், அன்பிலுடன் ஆசிரியர்கள் என்பதும் ஒன்றுதான். எல்லாவித சவால்களையும் கடந்து, மகிழ்வுடன் ஆசிரியர்கள் கற்பித்தல் செயல் பாடுகளில் மட்டும் ஈடுபடும் சூழல் விரைவில் ஏற்படும். அதில் ஏற்பட்டும் பிரச் சினைகளை அறிய மாவட்டம்தோறும் ஆசிரியர்களை நோக்கி நானே செல்லப் போகிறேன். அங்கு அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் சரிசெய்வேன்.  

எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ என்னை பார்ப்பதற்காக எந்த ஆசிரியரும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம்.  மாணவர்களின் பிரச் சினைகளை அறிய, மாணவர் மனசுப் பெட்டி போல, ஆசிரியர்களின் பிரச்சினை களை அறிய ஆசிரியர் மனசு என்னும் பெட்டி எனது அலுவலகத்திலும், வீட்டிலும் வைக்கப்படும். ஆசிரியர்கள் உங்கள் கோரிக்கைகளை அப்பெட்டியில் போட்டு விட்டு செல்லுங்கள். நானே உங்களை தொடர்பு கொண்டு உங்கள் கோரிக்கை களை நிறைவேற்றுவேன்.

ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கப்படும் மற்றும் விரைவில் ஆசிரியர் கள் குறைதீர் மையம் ஒன்று ஏற்படுத்தப்படும், அதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப் படும்” எனக் குறிப்பிட்டார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

அவர் மேலும் “பெரும்பாலான ஆசிரியர்கள் கோரிக்கையான  101, 108 அரசாணை கள் திருத்தம் முதல்வரின் ஒப்புதலுக்காக உள்ளது. விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும்.

ஆசிரியர்களுக்கு நமது அரசின் மீது உள்ள நல்லெண்ணத்தையும், நம்பிக்கையை யும் அசைத்துப் பார்க்கும் விதமாக இணையவழியில்  பல பொய்யான தகவல் களை சிலர் பரப்பி வருகின்றனர். எவ்வளவு பொய்யான தகவல்களை ஆட்சியின் மீதும், துறையின் மீதும் பரப்பினாலும், ஆசிரியர்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர் கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

பள்ளிகளில் மாணவர்களின் நலனிற்காக, துறையின் அமைச்சராகிய நானும், ஆசிரியர்களாகிய நீங்களும் இணைந்து செயல்படுவோம். நாம் ஒன்றினைந்து செயல்பட்டால் தமிழகத்தின் வருங்காலத் தலைமுறைகளை சிறந்தவர்களாக உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டுப் பேசியது தமிழ்நாடு முழுவதும் ஆசிரி யர்கள் மத்தியில் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் அமைச்சர் தனக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவை உண்ணா மல், ஆசிரியர்களோடு ஆசிரியராக அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவையே அவர்களுடனே அமர்ந்து பாக்குத்தட்டில் சாப்பிட்டது மாநிலம் முழுவதும் வந்திருந்த ஆசிரியர்களை நெகிழச் செய்தது.

இந்நிகழ்வை முன்னெடுத்து நடத்திய சிகரம் சதிஷிடம் கேட்டபொழுது, “நான் பதவியேற்றபொழுது எனக்கு சதிஷின் நினைவு வந்தது என அமைச்சர் பொது வெளியில் குறிப்பிட்டபொழுது, மிக நெகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியர்களோடு அமைச்சர் உரையாட வேண்டும் என்பதை ஆறு மாதங்களுக்கு முன்பே திட்ட மிட்டிருந்தோம். அது இப்பொழுதுதான் கைகூடியிருக்கிறது.

இனி ஒவ்வொரு மாவட்டமாகப் பயணித்து ஆசிரியர்களுடன் நேரடியாக உரை யாடும்பொழுது அமைச்சர் அன்பில் மகேஸ் நம்மில் ஒருவராக இருக்கின்றார் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்வர். மொத்த ஆசிரியர்களும் அமைச்சர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை அமைச்சரும் உணர்வார் எனத் தெரிவித் தார்.

விழாவில் கே.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ராமசாமி, தேசிய நல்லாசியர் கவிஞர் தங்கம்மூர்த்தி, தமிழ்நாடு அறக்கட்டளை செயல் அலுவலர் முனைவர் இளங்கோ, கல்லூரி முதல்வர் முனைவர் அகிலா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், கல்லூரி மாணவியர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

“ஆசிரியர்களாகிய நாங்கள் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களைச் சந்தித்து உரையாடியது எனது வாழ்வில் மிக மிக நெகிழ்ச்சியான தருணம். ஒரு அமைச்சரை இவ்வளவு எளிதாக நேரில் சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்தல் என்பது இதுவரை தமிழ்நாட்டில் அவ்வளவு எளிதாக நடந்தது இல்லை. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்  எனக்கு மிகவும் உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் தொழிலுக்கு எங்களை இன் னும் அர்ப்பணித்து சந்தோஷமான கல்வியை மாணவர்களுக்கு எப்படி வழங்கு வது என்று யோசிக்க வைக்கிறது. இதுபோன்ற ஒரு உரையாடல் நிச்சயமாக ஆசிரியராகிய எங்களுக்கு மிக மிக அவசியமான ஒன்று. அந்தக் கூட்டத்தில் நிறைய ஆசிரியர்கள் நிறைய முயற்சிகளை புதுமையான முயற்சிகளை மேற் கொண்டு அதை வெளிப்படுத்தினார்கள். அதைப் பார்க்கும்பொழுது இன்னும் எவ்வாறெல்லாம் புதிய முயற்சிகளை நான் எடுப்பது என்று  சிந்திக்கத் தூண் டியது.

அமைச்சர் எங்களுடன் சேர்ந்து ஒன்றாக உணவு அருந்தியது அவருடைய எளிமையைக் காட்டுகிறது. அவருடைய பெயரில் இருக்கக்கூடிய அன்பு, அவர் பேசும்பொழுது ஆசிரிய சமுதாயம் மேல்  அவர் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டியது.  தமிழ்நாட்டுப் பள்ளிகளில்  பயிலக்கூடிய ஒவ்வொரு பெண் குழந்தையும் தன்னுடைய  பெண் குழந்தைதான் என்று அவர் கூறியது பெண் ஆசிரியராக,  நம் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைக்கத் தோன்றுகிறது” என்றார் சேலம் மாவட்டம், அரசு உயர்நிலைப்பள்ளி, கோபாலபுரம் ஆங்கில ஆசிரியர் ஹேமலதா.

“அமைச்சரது பேச்சைக் கேட்க வேண்டும் என வரவில்லை. ஆனால்  தூரத்தில் நின்றாவது, ஒருமுறையேனும், நேரில்  அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று தான் நான் வந்தேன். ஆனால் அவர் பேசும் போது, ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும்போதும் என்னை அறியாமல் என் கைகள் தட்டிக் கொண்டே இருந்தன. நான் அவர் தனியாகச் சென்று வேறு ஒரு அறையில்தான் உணவு உண்பார் என நினைத்தேன். ஆனால்  எல்லாருடனும் சேர்ந்து உணவு உண்டதென்பது, அன்பில் அண்ணா மீது இன்னும் மிக அதிக ஈர்ப்பும் மரியாதையும் ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் யோசிக்காமல் உடனடியாக ஒவ்வொரு கேள்விக்கும் பதிலைத் தந்தது சற்று ஆச்சர்யம்தான். உண்மையில் எளியோரும் எளிதில் நெருங்கும் இடத்தில் சிறந்த பண்பாளர் அமைச்சர் இருப்பதென்பது பெரும் மகிழ்ச்சி. இந்த சிறப்பான ஏற்பாட்டினை வாய்ப்பினை வழங்கிய சிகரம் சதிஷ் அண்ணாவிற்கு என் முதல் நன்றி” என்றார் கோயம்புத்தூர், காரமடை, அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் முனைவர் P. லெட்சுமி பிரியா.

“தமிழகத்தின் மாநில கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளி ஆசிரியர்களின் நலம் சார்ந்து அவர்களுடன் உரையாட வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மையமாக வைத்து கல்வியாளர் சங்கமத்தின் அழைப்பின் பேரிலும் சிகரம் சதிஷ் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையின் பேரிலும் வந்திருந்தேன். அழைப்பிதழில்  குறிபிட்ட நேரத்தில் அமைச்சர் வந்திருந்து ஆசிரியர்களுடன் உரையாடி ஆசிரியர்களுடன் உணவு அருந்தியது மிகவும் மனதை நெகிழ வைத்த ஒரு சம்பவம்.

ஒவ்வொரு ஆசிரியர்களின் குரலாக அந்த மேடையிலேயே ஆசிரியர் மனசுப் பெட்டி வைப்ப தாகக் கூறிய விதம் அமைச்சர் ஆசிரியர்களுடன்தான் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இந்நிகழ்வு  கல்வித்துறை வரலாற்றில் மிகப்பெரும் மைல் கல்லாக இருக்கும் என்பது வரலாறு சொல்லும். இந்நிகழ்வை மிகவும் சிறப்பான ஒரு இடத்தில், விழாவை ஏற்பாடு செய்திருந்த கல்வியாளர் சங்கமத் தின் நிறுவனர் சிகரம் சதீஷ் அவர்களுக்கும், கே.பி.ஆர்.கல்வி குழுமத்தி னுடைய நிறுவனர் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர் களின் சார்பில் நன்றி” என்றார் காஞ்சிபுரத்தைச் சேர்நத் ஆசிரியர் நி.அன்பழகன்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...