ஸ்ரீஅம்மன் வழிபாடும் ஆடி வெள்ளியின் அற்புதங்களும்

 ஸ்ரீஅம்மன் வழிபாடும் ஆடி வெள்ளியின் அற்புதங்களும்

ஆடி மாதம் வரும் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள் ஆகும். ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் வரும். முதல் ஆடி வெள்ளி வருகிற ஜூலை 22ல் பிறக்கிறது. இதையடுத்து, இரண்டா வது ஆடி வெள்ளி ஜூலை 29ல் வருகிறது. மூன்றாவது ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 15 கடைசி வெள்ளிக்கிழமை, உள்ளிட்ட ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமை ஆகும். இந்த நாட்களின், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடி மாதம் முழுவதும், அம்மன் மாதம் என்பதால், சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். ஆடி மாதம் என்பது சக்திக்கு உரிய வழிபாடு. ‘மாதங் களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று பகவான் கிருஷ்ணர் சொன்னார் என்றால், ‘மாதங்களில் நான் ஆடியாக இருக்கிறேன்’ என்று சக்தியான பராசக்திக் காகச் சொல்லலாம்.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் விளக்கேற் றுங்கள். வீட்டில் அம்மன் படத்துக்குச் சிறப்பு பூஜை செய்யுங்கள். அம்மன் மந்திரம் போற்றி சொல்லுங்கள். ஓம் சக்தி சொல்லுங்கள்.

ஆடி மாதம் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண் கள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. தான தருமங்கள் செய்ய வேண்டும்

பூஜையில் சுமங்களை அழைத்து அவர்களுக்கு, பூ, பழம், தேங்காய், மஞ்சள் கயிறு, ஜாக்கெட் துணி போன்றவற்றை வைத்து அனுப்புங்கள். அப்படி செய்தால், உங்கள் குலம் தழைக்கும். மாங்கல்ய பலம் பெருகும். திருமண தடை நீங்கும். நீங்கள் நீண்ட காலம் சுமங்கலியாய் நீடூழி வாழலாம். உங்கள் வாழ்வில் சுபிட்சம் உங்கள் இல்லம் தேடி வரும்.

கன்னியாக்குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

மகாலட்சுமி வழிபாடு: ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சண்டி ஹோமம்: பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன் மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் ‘நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப் பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன் றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர் களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும். காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப் பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும்.

இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண் டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

ஆடி அமாவாசையன்று கடலில், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத் தால் அவர்களது ஆசி கிடைக்கும். ஆடி வெள்ளியன்று லட்சுமியை வழிபட்டால் பண மழையில் நனையலாம்.

வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோல மிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம்.

பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும். குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

சந்திரனும் சுக்கிரனும் ஆதிக்கம் செலுத்தும் மாதம் ஆடி மாதம். தந்தையை குறிக்கும் சூரியன் தாயிடம் சென்று சரணடைகிறார். அதற்கு முன்பே கணவனை குறிக்கும் செவ்வாய் நீச வீடான கடகத்தில் பலம் இழந்துவிட்டது. ஆகவே ஆண்கள் தங்கள் வரட்டு கௌரவத்திற்காக சண்டை போடாமல் ‘மாத்ரு தேவோ பவ:’ என சரணடைந்துவிடுவது நல்லது.

பண்டிகை நிறைந்த ஆடி மாதத்தில் வழிபாடுகளும் தான தர்மங்களும் செய்ய சிறந்த மாதமாகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...