20 கோடி பேர் பார்த்த ‘மிஸ்டர் காப்ளர்’ குறும்படத்துக்கு உலகப் பட விழாவில் பாராட்டு!
சத்தமின்றி ஒரு குறும்படம் ஓர் உலக சாதனையைப் படைத்துள்ளது. ‘மிஸ்டர். காப்ளர்’ எனும் குறும்படம் ஃபேஸ்புக்கில் மட்டும் கோடிக்கணக்கானோர் பார்த் தும், லைக் செய்தும், ஷேர் செய்தும் இருக்கிறார்கள். குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பன் 40, இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை விருது அறிவிக்கப்பட்டது.
மனித நேயத்தைப் போற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மிஸ்டர் காப்ளர் குறும் படத்தை இயக்கி, எழுதி, தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார் சதீஷ் குருவப்பன். வெறும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்தக் குறும் படத்தை 20 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். 70 லட்சம் பேர் லைக் செய் திருக்கிறார்கள்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த சதீஷ் குருவப்பன் இதுவரை 17 குறும்படங் களை இயக்கியுள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மனிதருக்குரிய மரியாதையைத் தர வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு இவர் 2017ல் இயக்கிய ‘மிஸ்டர் காப்ளர்’ படத்தை இதுவரை உலக அளவில் 20 கோடி பேர் பார்த்துள்ளனர். 70 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர்.
இதைப் பாராட்டி ஏற்கனவே சாம்பியன்ஸ் ஆப் தி யுனிவர்சல், அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கப்பட்டன. இந்நிலையில் அமெரிக்காவில் எல்.டி.யு.இ., அமைப்பு நடத்திய சர்வதேச திரைப் பட விழாவில் ‘மிஸ்டர் காப்ளர்’ படத்தை சிறந்த சாதனைப் படமாகத் தேர்வு செய்து விருது அறிவிக்கப்பட்டது.
எல்லா மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேய வாதிகளின் இலக்கு. ஆனால், இன்றும் அது முழுமையடைவதில் மனத்தடைகள் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒருவரை கதாபாத்திரமாக்கி அவரை யும் ஒரு சிறு குழந்தை மாற்றுவதாக இந்தக் கதை அமைக்கப்பட்டிருக் கிறது. சாலையோரம் செருப்பு தைத்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் தன் பூட்சை காலோடு நீட்டி பாலிஸ் போடச் சொல்கிறார் ஒருவர். அதேநேரத்தில் ஒரு சிறுமி தன்னுடைய பூட்சுக்கும் பாலிஸ் போட பூட்சை காலிலிருந்து கழட்டிக் கொடுக் கிறாள். அதைப் பார்த்து காலோடு பூட்சை நீட்டியவர் அதிர்ச்சி அடைகிறார். Learn to Respect all kinds of people என்று முடிகிறது.
இந்தக் குறும்படம் குருதர்ஸன் புரொடக்சன் தயாரிப்பில், சதீஷ் குருவப்பன் இயக் கியுள்ளார். இப்படத்தை Youtube -இல் Mr.COBBLER என்ற தலைப்பில் காணலாம்.
வாழ்த்துக்கள் சதீஷ் குருவப்பன்.