கண்ணதாசனிடம் மாட்டிய வெளிநாட்டுக்காரர்

 கண்ணதாசனிடம் மாட்டிய வெளிநாட்டுக்காரர்

கண்ணதாசன் நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவர். மூன்று வருடங் கள் மட்டுமே நாத்திகராக இருந்து, போராட்டங்களில் பங்கு கொண்டு பின்னர் ஆத்திகராகி இருக்கிறார். இந்து சமயத்தின் வளர்ச்சியிலும் மனித சமுதாயத்தின் நலத்திலும் கருத்து மிகச் செலுத்தி, தம் வாழ்க்கையில் பெற்ற அனுபவக் கீற்றுகளுக்கு உருக்கொடுத்து தத்துவத்தையும் ஞானத் தையும் சேர்த்து, கனியமுதம் போன்ற கட்டுரைகள் வடிவில், ‘அர்த்தமுள்ள இந்து மத’மாகத் தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.

இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல் அர்த்தமுள்ள இந்து மதம். இந்து மதத்துக்குச் சிறப்பாக விளக்கம் எழுதிய அப்படிப்பட்ட கண்ணதாசனிடமே இந்து மதத்தைப் பற்றி கிண்ட லாகக் கேள்வி கேட்டால் சும்மா விடுவாரா? இதோ அவரிடம் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மாட்டிக்கொண்டு விழித்த கதையைப் பாருங் கள்.

கவியரசர் கண்ணதாசனிடம்,  வெளிநாட்டினர் ஒருவர்  ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு கண்ணதாசன் அளித்த பதில் மிக சுவாரசியமானது. இந்து மதத்தின் கடவுள்களின் பெயர்களுக்கு அளித்த விளக்கம் என்றென்றும் மறக்கமுடியாதது.

வெளிநாட்டினர் கேட்ட கேள்வி :

”ஏன் உங்களுக்கு மட்டும்  இத்தனை கடவுள்கள் ? சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.?  எங்களைப் போல ஒரு கடவுள் என வைத்துக் கொள் ளலாமே?”

அதற்கு கண்ணதாசன் மிகப் பொறுமையாக அந்த மனிதரிடமே, திருப்பி கேள்வி கேட்கிறார்.

‘உன் பெற்றோர்க்கு நீ யார்.?’  எனக் கேட்டார்.

அதற்கு அவர், ‘மகன்’ எனப் பதிலளித்தார்.

‘உன் மனைவிக்கு.?’ 

கேள்வி தொடர்ந்தது. ‘கணவன்’.!

‘உன் குழந்தைகளுக்கு.?’

 ‘அப்பா, தந்தை.!’

உன் அண்ணனுக்கு.?’

‘தம்பி.!’

‘தம்பிக்கு?’

‘அண்ணன்.!’

‘கொழுந்தியாளுக்கு.?’

‘மச்சான்.!’

‘அண்ணன் குழந்தைகளுக்கு.?’

‘சித்தப்பா.!’

கவியரசர் கண்ணதாசன் கேள்வியை நிறுத்தவில்லை,  கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது. பெரியப்பா, மைத்துனர், மாமன், மச் சான் என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது. சில நிமிடங் கள் கண்ணதாசன் நிறுத்தினார். பின்பு ஆரம்பித்தார்.

“வெறும் மண்ணை தின்னப் போகும் உன் சடலத்திற்கே இத்தனை பெயர் கள் வைத்து அழைக்கும் போது, யாதுமாகி நின்று, எங்கெங்கும் நின்று உலகையே கட்டிக் காக்கும் என் அப்பன்  பரம் பொருளை எத்தனை பெயர் களால் அழைத்தால் என்ன?  அவன் எதற்குள்ளும் அடங்காதவன்,  எதற்குள் ளும் இருப்பவன்.  உன்னுள்ளும் இருப்பவன், என்னுள்ளும் இருப்பவன். உன்னை அழைத்தாலும் அவனே,  என்னை அழைத்தாலும் அவனே” என முத்தாய்ப்பாக முடித்தார். வெளிநாட்டினர் வாய் பேச முடியாமல் தவித் தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...