நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை: நுபுர் சர்மா கட்சியிலிருந்து நீக்கம்?

 நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை: நுபுர் சர்மா கட்சியிலிருந்து நீக்கம்?
நுபுர் சர்மா மற்றும் அசோக் ஜிண்டால்

சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குப் புகழ்பெற்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கடந்த மே மாதம் 27ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி  ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய போது இஸ்லாம் மதத் தின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசினார்.இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியாவில்இருக்கும் முஸ்லீம் மக்களைத்தாண்டி உலகின் ப ல முஸ்லிம் நாடுகளைக் கோபமடையச் செய்துள்ளது.

இதனால் இந்திய மற்றும் அரபு நாடுகள் மத்தியிலானவர்த்தக நட்புறவில் மிகப்பெரிய விரிசல் உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகள் இந்தியாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

சரி இந்தியா அரபு நாடுகளை எந்த விஷயங்களில் எல்லாம் சார்ந்துள்ளது தெரியுமா..?இந்தியாவின் நிலை இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆதாரங்கள் இல்லை என்பதால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளை நம்பி மட்டுமே இந்தியா இயங்கி வருகிறது. நுபுர் சர்மா போன்றோரின் பேச்சு அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் ஒரு மாதம் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினால் போதும் இந்தியா மொத்தமும் முடங்கிவிடும் நிலை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் அரபு நாடுகளின் சந்தை நாடு இந்தியா அதனால் அரபு நாடு களுக்குத்தான் பாதிப்பு என்கிறார்கள் ஒரு பக்கம்.

20-2021ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா நாடுகளிடம் இருந்து சுமார் 110.73 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள் ளது. இதேபோல் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் இந்தியா வில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

இதைத் தாண்டி GCC நாடுகளில் அதாவது கல்ப் நாடுகளில் இந்திய மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்தியாவின் மொத்த 32 மில்லியன் என்.ஆர்.ஐ.களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

நுபுர் சர்மா போன்றோரின் பேச்சுக்கு அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் எரிபொருள் தடை செய்வது மட்டும் அல்லாமல் பல கோடி பேரை வேலை யைவிட்டு நீக்கமுடியும். இவர்களுக்கு இந்திய அரசால் வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

இதேபோல் தற்போது நுபுர் சர்மா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 15க்கும் அதிகமான நாடுகளில் பணியாற்றும் என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்குஅனுப்பும் பல பில்லியன் டாலர் பணம் இழப்பு ஏற்படும்.

2021ல் மட்டும் 87 பில்லியன் டாலர் பணம் வெளிநாட் டில் இருந்து ரெமிட்டன்ஸ் கிடைத்துள்ளது.

கடந்தநிதியாண்டில் இது நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக இருந்தது. இருதரப்பு மொத்த வர்த்தகம் முந்தைய நிதியாண்டில் 22 பில்லியன் டாலரிலிருந்து 2021-22ல் சுமார் 43 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியா கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன் எல்.என்.ஜி.யை இறக்குமதி செய்கிறது மற்றும் தானியங்கள் முதல் இறைச்சி, மீன், ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வரை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 2020-21ல் 9.21 பில்லியன் டாலரிலிருந்து 2021-22ல் 15 பில்லியன் டாலராக உயர்ந் துள்ளது.

கடந்த நிதியாண்டின் இந்தியாவின் 27வது பெரிய வர்த்தகக் கூட்டணியாக இருக்கிறது குவைத். இருதரப்பு வர்த்தகம் அளவு முந்தைய நிதியாண்டில் 6.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ல் 12.3 பில்லியன் டால ராக உயர்ந்துள்ளது இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் கூட்டணி நாடாக விளங்குகிறது.

ஐக்கிய அரபு நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 43.3 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ல் 72.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் 31வது பெரிய வர்த்தகக் கூட்டணி நாடாக உள்ளது. ஓமன் நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 5.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் சுமார் 10 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவுடனான இருவழி வர்த்தகம் 2020-21ல் ஒரு பில்லியன் டாலரில் இருந்து 2021-22ல் 1.65 பில்லியன் டாலராக இருந்தது. ஈரானுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2020-21ல் 2.1 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2021-22ல் 1.9 பில்லியன் டாலராக இருந்தது.

இதேபோல் இந்தியா சமையல் எண்ணெய்க்கு அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகளில் இந்தோனேஷியா மிகவும் முக்கியமான ஒன்று, சமீபத்தில் இந்தோனேஷியா சில நாட்கள் மட்டுமே பாமாயில் ஏற்றுமதி தடை செய்த போது இந்தியா எந்த அளவிற்குப் பாதிப்புகளை எதிர்கொண்டது என்பதைப் பார்த்தோம்.

நுபுர் சர்மா பேச்சுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குவைத் நாட்டின் சூப்பர் மார்கெட்டுகள் சிலவற்றில் இந்திய பொருட்களை விற் பனை செய்வது நிறுத்தப்பட்டது. இந்தியா தனி நாடாக இயங்க முடியாது, எண்ணெய்க்கு
ஒரு நாடு, ஆயுதத்திற்கு ஒரு நாடு, தொழில்நுட்பத்திற்கு ஒரு நாடு எனப் பலவற்றில் பல நாடுகளை நம்பி உள்ளது. இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய கத்தார் வெளியுறவு அமைச்சகம், தோஹாவில் உள்ள இந்திய தூதர் தீபக் மித்தலுக்கு சம்மன் அனுப்பியது

இந்தக் கருத்துக்களுக்கு இந்திய அரசு சார்பில் பகிரங்க மன்னிப்பு மற்றும் கண்டனத்தை கத்தார் எதிர்பார்க்கிறது என்று கூறப்பட்டுள்ளது.இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தற்போது கத்தாருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் அங்கு கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜிஸ் அல்தானியை சந்தித்தார். இது குறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகை யில்,’இழிவான கருத்துகளை வெளியிடுவோர் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கத்தார் மற்றும் குவைத்தை அடுத்து, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) இந்தப் பிரச்னைக்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு, இந்தியாவின் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய ஒருவரின் சர்ச்சைக்குரிய அறிக்கையை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறியது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிக ரித்து வருவதாகவும், அவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்த ஓ.ஐ.சி. தனது ட்வீட்டில் ஹிஜாப் தடை மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற செய்திகளையும் குறிப்பிட்டுள்ளது.

சரி, முகமதுவுக்கு எதிரான கருத்து என்ன தெரிவித்தார் நுபுர் சர்மா?

முகமது நபி ஒரு பெண்ணை 6 வயதில் திருமணம் செய்து 9 வயதில் உறவு வைத்தார் என்று குர்ஆனிலேயே உள்ளது என்று கூறினார். அவருக்கு எதிரானப் பேசியவர் சிவலிங்கம் கூட ஒரு ஆண் குறியின் அடை யாளம்தான் என்னும்படி பேசியதன் எதிர்வினையாக நுபுர் சர்மா மேற்கண்ட வாறு பேசினார்.

இந்த விவாதம் நடந்த 10 நாளுக்குப் பிறகு கான்பூரில் உள்ள ஒரு மசூதில் தொழுகைக்குப் பிறகு ஒரு மறியல் நடத்தி அந்தப் பகுதியில் கடையடைப்பு செய்யச்சொல்கிறார்கள் முஸ்லிம்கள் அதற்கு இந்துக்கள் கடைகளை அடைக்க மறுக்கிறார்கள். இது ஒரு கலவரமாக மாறிவிடுகிறது.

சோஷியல் மீடியாவில் நுபுர் சர்மாவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் ஒலிக்கிறது. ஆனால்அதன்பிறகு நுபுர் சர்மா பல டி.வி. மீடியாக்களுக்கு இதற்கெல்லாம் நாம் பயப்படமாட்டேன் என்று எதிர்வினையாற்றுகிறார். இதெல்லாம் இந்தியாவுக்குள் நடக்கிற விஷயம்.

இந்த நேரத்தில் இந்திய துணை ஜனாதிபதி கதார் நாட்டில் அந்த அரசு நடத் தும் ஸ்டார் அப் பிரிட்ஜ் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள சென்று இருந் தார். இந்த திறப்பு விழா முடிந்து இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கவேண்டிய விருந்து நிகழ்ச்சி ரத்து செய் யப்படுகிறது. அடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கும் அனுமதி மறுக்கப் படுகிறது.

இதற்கிடையே உலகத்தில் உள்ள 50 இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரி வித்திருக்கிறது. ஈரானும் சவுதி அரேபியாவும் பகை நாடுகள் அதுவும் கூட சேர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்தப் பிரச்னைகளுக்குப் பிறகு நுபுர் சர்மா டிவிட்டர் பக்கத்தில் “என்னை எதிர்த்துப் பேசியவர் மீண்டும் மீண்டும் அந்த மசூதியில் இருந்தது லிங்கம் (மகேஸ்வர்) இல்லை. அது ஒரு நீரூற்று என்று திரும்பத் திரும்ப பேசினார். ஒரு இந்துவாக எனக்கு அதற்குப் பதிலாகத்தான் இந்தக் கருத்தை சொல்லி யிருந்தேன். அதற்காக நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.. இதனால் யாருடைய மனசை யும் நான் காயப்படுத்த விரும்பவில்லை. என்னுடைய தவறுக்கு என் மன்னிப்பைக் கேட்கிறேன்” என்றிருக்கிறார்.

முகமது நபிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவர்கள் மீதும், முஸ்லிம் களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.ஐ.சி கோரியுள்ளது. முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக் குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்காக அதன் தேசிய செய்தித் தொடர் பாளர் நூபுர் ஷர்மா மற்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

நவீன் குமார் ஜிண்டாலைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட் டுள்ள நிலையில், நூபுர் ஷர்மா கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கருத்துக்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்ததை யடுத்து, பா.ஜ.க. ஒரு அறிக்கையை வெளியிட்டது. பா.ஜ.க., அனைத்து மதங் களையும் மதிப்பதாகவும், எந்தவொரு மத ஆளுமைகளை அவமதிப்பதை யும் கடுமையாக விமர்சிப்பதாகவும் கூறியது.

இந்த விவகாரம் தொடர்பாக அரபு நாடுகளின் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியத் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண் டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

சரி, யார் இந்த நூபுர் ஷர்மா?

நூபுர் ஷர்மா, 1985ஏப்ரல் 23இல் பிறந்தார். தில்லி மதுரா சாலையில் அமைந்துள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பொருளாதார ஆனர்ஸ் பட்டதாரியான அவர், 2010 ஆம் ஆண்டு டெல்லி யில் எல்.எல்.பி. பட்டப்படிப்பை முடித்தார். நூபுர் ஷர்மா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ளார்.

2015 சட்டமன்றத் தேர்தலில், அவர் டெல்லியின் தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அவர் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நூபுர் டெல்லி பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் நன்கு அறியப்பட்ட முகம். நுபுர் ஷர்மா லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் எல்.எல்.எம். முடித்துள்ளார்.

கல்லூரி நாட்களில் இருந்தே அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் சீட்டில் போட்டியிட்டு DUSU (தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கம்) தலைவர் ஆனார். அதன் பிறகு தேசிய அளவிலான அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பாரதிய ஜனதா கட்சியி லிருந்து அரசியலைத் தொடங்கிய அவர், தற்போது வரை பல்வேறு பதவி களை வகித்து வருகிறார்.

தீவிரவாத குழு அறிவிப்பு கண்டனத்துக்குரியது

நபிகள் நாயகத்தை அவமதித்ததற்குப் பழிவாங்கும் வகையில் இந்திய நகரங்களில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் கொய்தா அமைப்பு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தின் அல் கொய்தா (ஏ.க்யூ.ஐ.எஸ்.) என்று அழைக் கப்படும் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘சில நாட் களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள இந்துத்துவாவின் பிரச்சாரகர்கள் இஸ்லாம் மதம் மற்றும் அல்லாஹ்வின் ஷரியாவுக்கு விரோதமான வகையில், நமது தத்துவம், முகமது நபிகள் மற்றும் அவரது மனைவி குறித்து மோசமான முறையில் இந்தியத் தொலைக்காட்சி சேனலில் பேசியுள்ளனர்.

இந்த அவமானத்திற்குப் பதிலளிக்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் பழிவாங்கும் உணர்வுகளால் நிரம்பியுள்ளன. இந்தியரை ஆக்கிரமித்துள்ள இந்துத்துவா பயங்கரவாதிகள் மற்றும் உல கின் ஒவ்வொரு துடுக்குத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக் களைக் கூறும் வாய்களை நாங்கள் எச்சரிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்தத் தீவிரவாதப் பேச்சு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு நுபுர் சர்மாவை டெல்லி செய்தி தொடர்பாளர் பதவியிலிருந் தும் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்தும் தற்காலிகமாக நீக்கியது. மற்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர் நவீன் குமார் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.

இந்தியா எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை என்கிற கருத்தையும் இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் பிரச்சினையை மதப் பிரச்சினை யாக போய்விடக்கூடாது என்பதில் இரண்டு மத அரசுகளும் கருதுகின்றன. இதற்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மக்கள் அமைதிப் பாதை யில் செல்ல உலக நாடுகள் வழிவகுக்கவேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *