புகையிலை ஒழிப்பு தினச் செய்தி
புகையிலை தொற்றுநோய் மற்றும் அதைத் தடுக்கும் மரணம் மற்றும் நோய் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளால் 1987ஆம் ஆண்டில் உலகப் புகையிலை இல்லாத நாள் உருவாக் கப்பட்டது. உலகின் இரண்டாவது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தைத் தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக, ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலகப் புகையிலை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதுதான் வேதனை. அமெரிக்காவின் புற்றுநோய் ஒழிப்புக் கழகம் நடத்திய ஆய்வறிக்கையை கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்டது. அதில் இந்தியாவில் புகைப்பிடிக்க தினமும் ரூ. 2 கோடி செலவு செய்யப்படுவதாகத் தெரிவித்திருந்தது. அதன்படி, ஆண்டுக்கு 730 கோடிக்கு மேல் இந்தியர்கள் புகைப்பிடிக்கச் செலவழித்து வருவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் அந்தக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமானோர் புகைப் பிடிப்பதாகவும், இவர்களில் 6.25 கோடி பேர் பள்ளி மாணவ, மாணவிகள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நோயால் குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தமிழகம் அதில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்களைப் போலவே பெண்களுக் கும் இந்தப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 100 பேரில் 90 பேர் ஓராண்டிலேயே இறந்து விடுகிறார்கள். புற்று நோயைத் தடுக்க அரசு ஆதரவு தரவேண்டும். புகையிலையை ஒழிக்கப் போது மான சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களை அரசு கடுமையாக்க வேண்டும்.
புகைப்பிடிப்பதை நிறுத்த சிறந்த வழியை அறியும் முன்னர் ஏன் நாம் அதற்கு அடிமையாகிறோம் என்பதை அறியலாம்.
புகையிலை (சிகரெட்) பல பொருட்களால் ஆனது. அவற்றுள் முக்கியமானவை தார், நிகோட்டின், அம்மோனியா, சர்க்கரை, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு, தாசெலூயின், கேட்மியம் போன்றவை.
இவற்றுள் தார், கார்பன் மோனாக்ஸைடு, மீத்தேன், கேட்மியம், தாசெலுாயின் ஆகியவை நாம் நெருப்பு பற்றவைக்கும்போது எரிந்து நச்சுத்தன்மை விளை விக்கின்றன. தார் ஆனது எரிந்து ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபினின் ஆக்சி ஜன் கடத்தும் திறனைக் குறைக்கின்றது. ஆனால் இவை எவையும் நம்மை அவற்றுக்கு அடிமை ஆக்குவதில்லை.
நம்மை அதற்கு அடிமை ஆக்குவது நிகோட்டின் எனப்படும் போதைப் பொருள் தான். இதன் அரை வாழ்வு 2 மணி நேரங்கள். அதுவரை இரத்தத்தில் இதன் விளைவுகள் காணப்படும். மற்ற போதைப்பொருட்கள் போல இதுவும் நம்மை அடிமை ஆக்குகின்றன.
ஆனால், புகைப்பிடிப்பதை 6 வாரங்களில் நிறுத்தலாம் 2 மாதத்தில் நிறுத்தலாம் என்று விளம்பரம் செய்பவர்கள் அனைவரும் உபயோகிக்கும் பொருட்களில் நிக்கோடின் முக்கிய பங்கு விகிக்கிறது. எ.கா. நிக்கோட்டின் கம். இவை புகை யிலிருந்து நம்மை விடுவித்தாலும் இவற்றுக்கு நம்மை அடிமை ஆக்கிவிடும். அதனால் இவற்றை பயன்படுத்துவது நமக்குத் தேவையான விளைவைத் தராது.
சிலர் இ-சிகரெட் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். இ-சிகரெட் மற்றும் பிற வேப்பிங் கருவிகள் இதற்கான விடை இல்லை. இதற்கான கருவிகள் பல்வேறு வடிவுகளில் வருகின்றன. இவற்றிலும் நிக்கோடின் மற்றும் பிற கெமிக்கல்களே பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரக்கனிடமிருந்து இந்த அரக்கனிடம் சிக்கிய கதை தான் இது.
நிக்கோட்டின் ஆனது இரத்தத்தில் கலந்தவுடன் அட்ரினலெனை சுரக்கச் செய்து மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இவை இரத்த அழுத்தம், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இவை மூளையில் டோபமைன் என்னும் ஹார்மோன் சுரக்கச் செய்கிறது. மகிழ்ச்சி (பிளசர்) அளிக்கும்.
சிலர் ஹெர்பல் சிகரெட் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அவை துளசி, லெமன் கிராஸ், தாமரை, ரோஜா இதழ்கள், சில ஹெர்ப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின் றன. இவற்றில் நிக்கோடினோ அல்லது வேறு போதைப் பொருளோ இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நம்பத்தன்மை இல்லை.
புகைப்பிடித்தலிலிருந்து தப்பிக்க இந்த வழிகளைப் பின்பற்றினால் நீங்கள் போதைக்குத்தான் அடிமையாக வேண்டும். அதற்குப் பதிலாக நீங்கள் புகைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதெல்லாம் பயனுள்ள வேலை கள் எதிலாவது ஈடுபடலாம். புகைப்பிடிக்கும் எண்ணம் வரும்போது தண்ணீர் அருந்தலாம். வீட்டில் சமைத்த உணவை உண்ணலாம். வேலைகளில் ஈடுபட லாம். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது. வீட்டில் இருப்பவர் களுக்கு உதவுவது என்று உங்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் போது உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றாமல் இருக்கும். உடற்பயிற்சி, மனதுக்குப் பிடித்தமான வேலை, நல்ல உணவு, சந்தோஷமாக இருக்க முயற்சிக்கும்போது பெரும்பாலும் புகைப்பிடிக்கும் எண்ணம் வராது. இதன் மூலம் நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தலாம்.
புகையால் மூச்சுத்திணறல் எப்படி ஏற்படுகிறது?
நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, சுற்றுச்சூழலில் உள்ள காற்று நுரையீரல் உள்ளே போகிறது. (வெறும் ஆக்சிஜன் மட்டுமல்ல; ஆக்சிஜனும் கலந்த வாயுக்கலவை உள்ளே போகிறது) உள்ளே நுரையீரலின் சுவர்களில் உள்ள நுண்ணூறுஞ்சிகள் அந்தக் கதம்ப காற்றில் உள்ள ஆக்சிஜனை உருஞ்சி ரத்தத்துடன் சேர்க்கும். (மற்ற வாயுக்களை வெளியே தள்ளிவிடும்) அந்த ஆக்சிஜன்தான் உங்களை, உங்கள் உடலுறுப்புகளை இயக்குகிறது.
இப்போது சிகரெட் புகையை உள்ளிழுக்கும்போது, உள்ளே போகும் வாயுவில் வெறும் 1% ஆக்சிஜன் தான் காணப்படும். உள்ளே வரும் நச்சுப் புகையை அறியாத எதிர்பாராத நுரையீரல் சுவர்கள் ஆக்சிஜனை உருஞ்ச எத்தனிக்கும். ஆனால் கிடைப்பதோ கார்பன் மோனாக்சைட் போன்ற நச்சுத்தன்மை நிறைந்த வாயுக்கள் மற்றும் தார் மற்றும் நிக்கோட்டின். ஆக்சிஜன் உள்ளே வந்து வெளியே போகும் சுழற்சி பாதிக்கப்படுகிறது. நச்சுத்தன்மை கொண்ட புகை ஏற்படுத்தும் இரிடேக் ஷன்தான் இருமலை ஏற்படுத்துகிறது. இருமல் என்பதே ஒரு வகையில் வண்டியில் உள்ள ஹாரன் மாதிரி தான். ‘நான் சரியாக இல்லை, என்னை கவனி’ என்ற எச்சரிக்கை தான் இருமல்.
இதோடு முடியவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நாளாவட்டத்தில் நுரை யீரலின் சுவர்களில் ஆக்சிஜனை உறிஞ்ச இருக்கும் அரும்புகளின் மீது தார் ஒரு சிமெண்ட் கலவை போல் படிந்து, நாளாவட்டத்தில் அரும்புகளை மறைத்தே விடும். அதன் விளைவாக உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவு குறைந்து விடும். விளைவு… எப்போதும் சோர்வாகக் காணப்படுவது, இருமல், கட்டி சளி, போன்றவை ஏற்படும்.
ஆளைப் பார்த்தாலே – நல்ல டொக்கு விழுந்து போய்- தெரியும். வேகமாக நடக்க முடியாது. ஓடமுடியாது. குறைந்த ஆக்சிஜனில் வண்டி ஓடுவதால் இதயத்துக்கு தான் பெரும் இடி.. ரத்த அழுத்தம் என்று சகல நோய்களும் வரும்…
புகையால் கேன்சர் வருவது எப்படி?
நுரையீரலின் சுவர்களில் படிந்துள்ள தார் சுவாச அரும்புகளைப் போர்வை போல் மூடிவிடும். உங்கள் உடலில் இயற்கையாகவே உள்ள எதிர்க்கும் திறனால் மூளை அரும்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர வைக்கும். படிந்துள்ள தாரை கிழித்துக்கொண்டு அரும்புகள் வெளியே வரும். அப்போது சில இடங்களில் தார் படலம் மெல்லியதாக இருக்கும். சில இடங்களில் திக்காக இருக்கும். இந்த வேறுபாடுதான் ஆபத்து. மெலிதாக உள்ள இடங்களில் அதிகப் படியான வளர்ச்சி பெறும் அரும்புகள்தான் கேன்சர். அதிலும் புகைப்பவன் திரும்ப திரும்ப தார் படலத்தை உள்ளே அனுப்பிக்கொண்டே இருக்கிறான். அப்போது என்ன நடக்கிறது என்று அறியாமல் உடலின் சமநிலை கடுமையாக பாதுக்கப் படுகிறது.
புகைப்பவர்கள் அனைவருக்கும் கேன்சர் வருவதில்லையே…ஏன்?
திரும்ப நுரையீரலுக்கு உள்ளே போக வேண்டும். அபூர்வமாக தாரின் படலம் ஒரே மாதிரியாகப் படர்ந்திருக்கும். அப்போது அரும்புகளின் வளர்ச்சி எல்லா இடங்களி லும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். சோ, தற்காலிகமாக நோ கேன்சர்.
டில்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபாடு காரணமாகச் சுற்றுச்சூழல் வாயுக்களில் ஆக்சிஜன் மிகக் குறைவாக இருக்கும். மற்றவை மேலே சொல்லி விட்டேன்.
புகைப்பிடித்தல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று ஏன்?
புகையிலை பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு நுரையீரலைச் சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் புகைப்பிடித்தலை நிறுத்திய 20வது நிமிடமே இருதயமும் நுரையீரலும் தன்னைத்தானே சுத்தம் செய்யும் வேலைகளை ஆரம்பித்துவிடும் .
ஆனால், பாவி இவ்ளோ நாளும் என்னைக் கருக்கிட்டியே என்று உங்களை திட்டிக்கொண்டே சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பிக்கும்.
அப்போது நீங்கள் மூன்று மாதங்கள் நடைப்பயிற்சி மெல்ல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள். ஒரே நாளிலோ, திடீரெனவோ அதிகரிக்காதீர்கள். அது ஆபத்தை உண்டாக்கும்.
3 மாதங்களில் சுமார் 6 முதல் 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி வந்தவுடன் அந்த அளவைத் தொடருங்கள் சரியாகிவிடும்.
மனிதனின் அலட்சியம் தெரிந்தே, பிழைத்துப் போகட்டும் என, நல்வாய்ப்பாக, இயற்கை இரு நுரையீரல்களை, இரு சிறுநீரகங்களை, இரு செவிகளை, இரு கண்களை, இரு கைகளை, இரு கால்களைக் கொடுத்துள்ளது! எச்சரிக்கை இன்மையால் ஒன்று நாசமானாலும், அறிவு வந்து ஒன்றை வைத்துப் பிழைக் கட்டும் என. அதையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள்.