உலகப் பணக்காரர் பட்டியலில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி
சொத்து மதிப்பு ரூ.9.46 லட்சம் கோடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டிய லில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி
பிரதமர் மோடியின் ஆதரவு பெற்றவர் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் 59 வயதாகும் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு 9.46 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தின் நிறுவனங்களான அதானி மின் உற்பத்தி, அதானி துறைமுக நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் ஏழு நிறுவனங்கள் உள்ளன. இப்படி இந்தியத் தொழில்துறையில் அசுர வளர்ச்சி அடைந்து உலகப் பணக் காரர்கள் பட்டியலில் டாப் 10 இடம் பிடித்தார்.
தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து அவர் சமீபத்தில் 7வது இடத்துக்கு முன்னேறினார். இந்த நிலையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 5வது இடத்தைப் பிடித்தார் என செய்தி வெளியிட்டிருக்கிறது.
5வது இடத்தைப் பிடித்ததன் காரணமாக அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். 91 வதான வாரன் பபெட்டின் நிகர சொத்து மதிப்பு ரூ. 9.30 லட்சம் கோடியாகும். அவர் 6வது இடத்துக்குப் தள்ளப் பட்டுள்ளார்.
இந்தியாவின் இன்னொரு மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 8 லட்சம் கோடியாகும். அவரைவிட கௌதம் அதானிக்கு ரூபாய் 1.46 லட்சம் கோடி சொத்து அதிகமாக அதிகரித்திருக்கிறது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்பேஸ் எகிஸ் தலைவர் இலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.20.46 லட்சம் கோடியாகும்.
அதற்கு அடுத்தபடியாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ரூ.13 லட்சம் கோடி யுடன் 2வது இடத்தில் உள்ளார்.
பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் ரூபாய் 12.8 லட்சம் கோடியுடன் 3வது இடத்தில் உள்ளார்.
மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரூபாய் 9.95 லட்சம் கோடியுடன் 4வது இடத்திலும் உள்ளார்.
மோடியின் ஆதரவு பெற்ற கௌதம் அதானி குழுமம் கூடிய விரைவில் 4 அல்லது 3வது இடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்.